பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

host

118

HTML


கணிப்பொறி. எ-டு. பிரிஸ்டெல். 2) மற்றொரு வகைக் கணிப்பொறியில் செயற்படுத்த நிகழ்நிரல்களை உருவாக்கும் கணிப்பொறி.

hosting - ஒம்புதல் : தொடக்கப் பக்கத்தை வலையத்தின் ஒரு பகுதியாக்கி, இணையப் பயனாளிகள் அனைவரும் அதைப் பார்க்குமாறு செய்தல். தவிர, நம் கணிப்பொறியிலிருந்து எச்டிஎம்எல் குறிமுறையைப் பணியாளிக்கு (சர்வர்) மாற்றுவதும் ஆகும்.

host processor - A micro processor having overall control of other microprocessors in a multiprocessor system. ஒம்பு செயல்முறையாக்கி : இது ஒரு நுண் முறையாக்கி, ஒரு பன்ம முறையாக்கித் தொகுதியிலுள்ள நுண்முறையாக்கிகளை முழுவதும் கட்டுப்படுத்துவது.

house-keeping - Routineswithin a programme not directly concerned with solution of the problem நடைமுறை ஒழுங்கு : ஒரு நிகழ்நிரலிலுள்ள நடைமுறைகள். இவை ஒரு சிக்கலுக்குத் தீர்வு காண்பதோடு நேரடியாகத் தொடர்புடையன அல்ல.

HTML, Hyper Text Markup Language - எச்டிஎம்எல், மீப் பாடக் குறிமொழி.

HTML, advanced concepts and trends in -எச்டிஎம்எல் லில் முற்போக்குக் கருத்துகளும் போக்குகளும் : இது இன்று எல்லோரும் நன்கு அறிந்த ஒன்று. வேறுபட்ட மேய்விகளில் உள்ள ஒட்டுகளில் சிறு வேறுபாடுகள் உள் ளன. ஆகவே இதற்குத் திட்டமான ஒட்டுகள் உண்டாக்க வேண்டும் என்னும் தேவை ஏற்பட்டது. ஜனவரி 2000 திட்டம் என்பது எச்டிஎம்எல் 40 ஆகும். இதன் உட்கருத்து இதுவே: எல்லா மேய்விகளும் ஒரே பெயருள்ள ஒட்டுகளைப் பயன்படுத்த வேண்டும். இது திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பண்புகளுக்கும் பொருந்தும். இதனால் எல்லா மேய்விகளும் ஒரே மாதிரியான எச்டிஎம்எல் பக்கத்தைக் காட்டும். இது இன்றுவரை எட்டாத உண்மை. இருப்பினும், குறிப்பிட்ட பண்புகளும் ஒட்டுகளும் உள்ள மேய்விகளும் உள்ளன. வலையத்தில் (வெப்) ஒம்புவதற்குமுன் ஒன்றிற்கு மேற்பட்ட மேய்வியைப் பயன்படுத்தி எவ்வாறு ஆவணம் நன்கு காட்சிக்கு உள்ளாகிறது என்று பார்ப்பது அறிவுடைமை ஆகும்.

ஓர் இணைப்பாகச் செயலாற்ற நங்கூர ஒட்டில் ஓர் உருவைப் பயன்படுத்தலாம். இவ்வுரு ஓர் இணைப்பு என்பதை மேய்வி, பயனாளிக்குக் குறிப்பால்