பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

HTML

119

HTML


காட்டும். பயனாளி உருவைத் தட்டி இணைப்புக்குச் செல்கிறார். ஒரே உருவிற்குரிய வேறுபட்ட பகுதிகளுக்கான வேறுபட்ட இணைப்புகளை வரையறை செய்ய எச்டிஎம்எல் நமக்கு உதவுகிறது. உருவின் ஒருபகுதி மேல் சுட்டெலி நகரும் பொழுது, அதை ஒத்த இணைப்பு இருப்பதைக் குறிப்பால், அது காட்டும். இவற்றிற்கு சுட்டெலி நுண்ணுர்வு உருக்கள் என்று பெயர்.

பயனாளியால் வழங்கப்படும்.குறிப்பிட்ட அட்டவணைச் சொற்களைக் கொண்டு, எச்டிஎம்எல் ஆவணங்களை நாம் தேட இயலும். இச்சொற்களை அடையாளமறிதலும் ஒரு விரைந்த தொழில் முறையாகிவிட்டது.

எச்டிஎம்எல் என்பது விஷவல் பேசிக் படி எழுத்தையும், ஜாவா படி எழுத்தையும் சேர்க்க வாய்ப்பளிக்கிறது. இதில் வினையுறு எக்ஸ் கட்டுப்பாடுகளும் அடங்கும். இவை எல்லாம் எச்டிஎம்எல் ஆவணத்தில் இருக்கும். பொருளறி மற்றும் ஆப்லெட் ஒட்டுகளைப் பயன்படுத்தி, இதைச் செய்ய இயலும். இவ்வசதிகளைப் பயன்படுத்தி, ஆவணங்களை ஒன்றுக்கு மற்றொன்று வினைகொள்ளக்கூடியதாகச் செய்யலாம். மேலும், ஆவணத்தில் பல முற்போக்கு இயல்புகளையும் புகுத்தலாம்.

HTML, definition of - எச்டிஎம்எல் இலக்கணம் : இச்சொல்லின் விரிவு Hyper Text Markup Language என்பதாகும். மீப்பாடக் குறிமொழி. மீபாகுமொ. இது ஒர் ஆவணத்தின் அடக்கப்பொருள். இந்த ஆவணம் பாடம், படம் முதலியவற்றால் பிற ஆவணங்களோடு இணைப்பு கொள் வது. இது ஒருமொழி ஆவணத்துடன் தொடர்புள்ள படங்களையும் மீப்பாடத்தையும் காட்டுவது எப்படி, உலகளாவிய இடையத்தில் உள்ள ஏனைய ஆவணங்களோடு இணைப்புகளை உண்டாக்குவது எப்படி என்பதை இது மேய்விக்கு அறிவுறுத்தும். ஆவணங்களைக் கவர்ச்சியாகக் காட்டவும் உதவுவது.

HTML document, creation of எச்டிஎம்எல் ஆவணத்தை உருவாக்கல் : இந்த ஆவணங்களை உருவாக்கப் பதிப்பிப்பி (சொல்முறையாக்கி) தேவை. காட்டாகக் குறிப்புத்தாளை, சாளரங்களைப் பயன்படுத்தும் பொழுதும், டாஸ் பதிப்பிப்பி யை டாசைப் பயன்படுத்தும் பொழுதும். பயன்படுத்தலாம். நம் பணியைப் போட்டுக் காட்ட ஒரு மேய்வியும் தேவை: இணைய ஆராய்வி,