பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Ada

12

add

Ada - அடா : அமெரிக்கப் பாதுகாப்புத்துறை உருவாக்கிய உயர்நிலை மொழி. அறிவியல், தொழில், போர் ஆகிய துறைகளில் பயன்படுவது. கவுண்ட்லஸ் அடா ல்வ்லாஸ் பெயரால் அமைந்தது. இவர் சார்லஸ் பாபேஜின் நண்பர்.

adapter - A device in the inquiry buffer unit converting bits of receiving information serially into parallel bit form for use.
இணைப்பி : ஆய்வுதாங்கு அலகில் உள்ள கருவியமைப்பு. பெறும் செய்தித் துணுக்குகளைத் தொடர்ச்சியாக ஒரு போகு துணுக்காக நாம் பயன்படுத்துவதற்காக மாற்றுவது.

adapter card - This is a special circuit determining the capability of a monitor.
இணைப்பி அட்டை : இது ஒரு மின்சுற்று. கண்காணிப்பியின் திறன்களை உறுதிசெய்வது.

adapter card, kinds of -
இணைப்பி அட்டை வகைகள் : 1) வண்ண வரைகலை இணைப்பி, சி.ஜி.ஏ. 2) விரிவு வரைகலை இணைப்பி, ஈ.ஜி.ஏ. 3) திசைச்சாரி வரைகலை இணைப்பி, விஜிஏ. 4) மீத் திசைச்சாரி வரைகலை இணைப்பி, எஸ்.விஜிஏ.

adder - A digital circuit used in calculators and computers. It adds together two binary numbers.
கூட்டி : கணிப்பான்களிலும் கணிப்பொறிகளிலும் பயன்படும் இலக்க மின்சுற்று. இரண்டு இரும எண்களைக் கூட்டுவது.

adding -
கூட்டல் : நிறம்,படம் முதலியவற்றை ஆவணத்தோடு சேர்த்தல்.

add-on - The ability to increase memory capacity by attaching circuitry.
மேல்சேர் : மின்சுற்றை இணைத்து நினைவகத்திறனை உயர்த்தும் திறன்.

address - A number in binary code identifying a particular location where data is stored in a computer memory.
முகவரி : இனவரி. இருமக்குறிமுறையிலுள்ள எண். குறிப்பிட்ட இடத்தை இனங் காண்பது. இந்த இடம் கணிப்பொறியில் தகவல் சேமித்து வைக்கப்படுவது.

address bus - An electrical pathway between the micro processor and memory in a computer.
முகவரிவாய் : இனவரிவாய். ஒரு கணிப்பொறியில் நினைவகத்திற்கும் நுண்முறையாக்கிக்கும் இடையிலுள்ள மின்வழி.

address field - The part of a computer programme instruction. Here a particular piece