பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

HTML

120

HTML


வலைக் காட்சிக் செலுத்தி. இணைய இணைப்பும் பயனுள்ளதாக இருக்கும். இதன் பயன்களாவன: இணையத்திலுள்ள எச்டிஎம்எல் ஆவணக் குறிமையைச் சுமை இறக்கம் செய்யவும் ஆராயவும், கிடைக்கக்கூடிய ஆவணங்களோடு இணைப்புகளை உண்டாக்கவும், இணையத்தில் நம் ஆவணங்களை வெளியிடவும் உதவும்.

அங்காடியில் பல மென் பொருள்கள் உள்ளன. இவை எச்டிஎம்எல் ஆவணங்களை உருவாக்க உதவுபவை. எ-டு மைக்ரோசாஃப்ட் சொல் 97, முன்பக்கம், இணையக்காட்சிக் கோப்பி, காட்டாக, மைக்ரோசாஃப்ட் சொல்லைப் பயன்படுத்தி, நம் பாடத்தைத் தட்டச்சு செய்து படிவமைப்பு செய்யலாம். படத்தை ஒட்டலாம், ஆவணத்தை எச்டிஎம்எல் ஆவணமாகச் சேமிக்கலாம். இது தானாகவே நமக்குத் தேவைப்படும் ஒத்தமையும் குறிமையை உருவாக்கும்.

HTML document, structure of எச்டிஎம்எல் ஆவன அமைப்பு : இந்த ஆவணம் ஒவ்வொன்றும் எச்டிஎம்எல் ஒட்டோடு தொடங்கும். இந்த ஆவணத்தைத் தொடர்வது என்ன என்ன என்பதை இந்த ஒட்டு குறிக்கும் இந்த ஆவணத்தில் இருபகுதிகள் உண்டு 1) தலைப் பகுதி 2) உடல் பகுதி.

தலைப் பகுதி: ஆவணத்தின் தலையைச் சுட்டிக் காட்டுவது இப்பகுதி. இது தலை ஒட்டோடு தொடங்கும். இதைத் தலைப்பு ஒட்டு தொடரும். இதற்குப்பின் ஆவணத் தலைப்பு வரும். நம் தகவலுக்காகவே இத்தலைப்பு உள்ளது. மேய்வியின் தலைப்புப் பட்டையில் காட்டப்படும். தலைப்பு, தலைப்பு முடிவு ஒட்டோடு முடியும் தலைப் பகுதியை முடிக்க </Head> ஒட்டைப் பயன்படுத்த வேண்டும்.

உடல் பகுதி ! இப்பகுதியில் ஆவணம் மட்டும் இருக்கும். இப்பகுதி உடல் ஒட்டோடு தொடங்கும். அடுத்து வருவது ஆவணங்களின் பாடம் உடல் முடிவு ஒட்டோடு இது முடியும். ஆவணத்தின் கடைசிவரி எச்டிஎம்எல் முடிவு ஒட்டாகும். இந்த ஆவணம் முடிவதை இந்த ஒட்டு குறிக்கும்.

HTML, history of -எச்டிஎம்எல் வரலாறு : டிர்ன் பெர்னர்லீ என்பார் ஓர் ஆராய்ச்சியாளர். இவரே இதை முதன்முதலில் கருத்தில் கொண்டவர். கொண்ட ஆண்டு 1989. பின் இது மிகப் பரவலாகி கோபரை மாற்றீடு செய்தது.

HTML, kinds of - எச்டிஎம்எல் வகைகள் :1)DHTML-டிஎச்டிஎம்எல் 2)XML-எக்ஸ்எம்எல் விரிவு அவ்வப்பதிவுகளில் காண்க