பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

index

127

index

particular item from array of items found in memory. அட்டவணை : அடைவு திறவுத்தொடர் வரிசையில் நினைவகத்திலுள்ள பார்வை அட்டவணை. எ-டு கோப்பிலுள்ள இனங்கள். குறியீட்டெண் : நினைவகத்தில் காணப்படும் இன நெடுவரிசையிலுள்ள குறிப்பிட்ட இனத்தைத் தேர்ந்தெடுக்கப் பயன்படும் எண்.

index arithmetic unit - A section of a computer doing index calculations. (addition, subtraction) குறியீட்டு எண்கணித அலகு : குறியீட்டுக் கணக்கீடுகள் (கூட்டல், கழித்தல்) செய்யும் கணிப்பொறியின் பகுதி.

indexed address - Variable address. குறியிட்ட முகவரி : மாறு முகவரி.

indexing - A method used to retrieve information from a table in memory or file on a direct access store. அட்டவணையிடல் : நேரடி அணுக்கச் சேமிப்பிலுள்ள நினைவகம் அல்லது கோப்பில் அட்டவணை உண்டு. இதிலிருந்து தகவலைப் பெறும் முறை.

index marker - The beginning and end of each track in a disk. அடைவுக்குறிப்பி : ஒரு வட்டிலுள்ள ஒவ்வொரு தடயத்தின் தொடக்கமும் முடிவும்.

index point - reference point. குறியிடல்புள்ளி : பார்வைப் புள்ளி

index register - A register having a modifier to enable data to be indirectly addressed. குறியீட்டுப் பதிவகம் : மாற்றியமைப்பியைக் கொண்டுள்ள பதிவகம். இது தகவலை மறைமுகமாக இனங்காண்பது.

index variable - A particular variable. குறியீட்டு மாறி : ஒரு குறிப்பிட்ட மாறி

index variable, steps in - குறியீட்டு மாறியின் படிகள் : இதிலுள்ள நான்குபடிகள் பின்வருமாறு : 1) தொடக்க மதிப்பு தொடங்கும் பொழுது, இம்மாறி முழு எண்ணாகவே இருக்கும். 2) இம்மாறியின் மின்னோட்டமாறி, இறுதி மதிப்போடு ஒப்பிடப்பட வேண்டும். திரும்பத்திகும்ப நடைபெறும் செயல்கள், ஒன்றிற்கு மேற்பட்டதாக இருக்க வேண்டும் என்பதை முடிவுசெய்ய இது தேவை. 3) விடை 'ஆம்' எனில், உடன் தேவையான செயல்களைச் செய்ய வேண்டும். 1 என்னும் வகையில் குறியீட்டு மாறியை உயர்த்துக. இரண்டாம் படி