பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

inter

133

inter

முறையில் இயக்க இம்முறை உதவுவது.

interlock - இடைப்பூட்டு : வன்பொருள் அல்லது மென்பொருளில் நிறைவேற்றப்படும் பொறிநுட்பம். ஒரு கணிப்பொறித் தொகுதியில் ஒன்றிற்கு மேற்பட்ட முறைகளை ஒருங்கிணைக்கப் பயன்படுவது.

interlude - இடைநிகழ்வு : சிறியனவாகவுள்ள தொடக்கச் செயல்களைச் செய்ய வடிவமைக்கப்பட்ட நிகழ்நிரல். எ-டு குடும்ப மேலாண்மை.

internal arithmetic - உள்எண் கணிதம் : மையச் செயலகத்தில் கணிப்பொறி எண்கணித அலகில் நடைபெறும் எண்கணிதச் செயல்கள்.

International Protocol Address - அனைத்துலகத் திட்ட மரபு முகவரி. பா. network addressing.

International Standards Organization - பா. ISO.

internet-இணையம் : சுருக்கம் Net. வலையமைவுகளின் வலையமைவு இணையமாகும். சிறியனவாகவும் பெரியனவாகவுமுள்ள பல வலையமைவுகள் உலகம் முழுவதும் இணைக்கப்படுகின்றன. இன்று இணையத்தில் 50 மில்லியன் கணிப்பொறிகள் உள்ளன. 100 மில்லியன் பயனாளிகள் உள்ளனர். இணையத்துடன் தொடர்பு கொண்டு, உலக அளவில் செய்தித் தொடர்பு கொள்ளலாம். கணிப்பொறி வளர்ச்சியில் ஓர் எல்லைக்கல் இணையம். இது உலகை ஒரு சிற்றூராக மாற்றியுள்ளது. உலகத்தைப் பார்க்கும் மாயச்சாளரமாகவும் உள்ளது. ஒ. world wide web.

internet account - இணையக் கணக்கு : இது தொடங்குவதற்குரியது.

internet, advantages of - இணைய நன்மைகள் : இவை பின்வருமாறு : 1) இது ஒரு தகவல் களஞ்சியம், இதில் மில்லியன் கணக்கு அளவுள்ள தகவல் பக்கங்கள் உள்ளன. 2) எந்தத் தகவலை வேண்டும் மென்றாலும் எப்பொழுதும் தெரிந்து கொள்ளலாம். கல்வி, விளையாட்டு, தேர்வு முடிவுகள் 3) இணையப் பக்கங்களில் பெரும்பான்மைப் பொத்தான்களைக் கொண்டுள்ளன. இவற்றைச் சொடுக்கக் கீழிறக்கம் ஏற்படும். 4) இதில் நிறைய மென்பொருள் உள்ளது, இதில் எதை வேண்டுமானாலும் ஒருவர் கணிப்பொறிக்கு மாற்றிப் பயன்படுத்திக் கொள்ளலாம். 5) டெல்நெட் (தொலை இணையம்) என்பது ஒரு கருவியமைப்பு, இதன்மூலம் தகவல்