பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

inter

135

inter


2) கேளிக்கை அவா

3) பொருளீட்டல்

internet, history of - இணைய வரலாறு 1960 களில் அமெரிக்கப் பாதுகாப்புத் துறை, இணையத்தின் இன்றியமையாத் தேவையை உணர்ந்தது.இது தங்கள் நாட்டிலுள்ள கணிப்பொறி ஒருங்கிணைப்பையே நம்பி இருக்க வேண்டி இருந்தது. ஏதோ ஒரு காரணம் பற்றி, இவ்வொருங்கிணைப்பில் ஓர் வலையமைவு பழுதுபட்டால் முழு ஒருங்கிணைப்பும் சிதையும்.ஆகவே,கணிப்பொறி ஒருங்கிணைப்புத்திட்டம் ஒன்றை அது உருவாக்கியது.

இத்திட்டம் தகவல் தொடர்பு விதிகளைத் தொகுத்தது.இதனால் ஒரு கணிப்பொறி,மற்றொரு கணிப்பொறியோடு தொடர்பு கொள்ளலாம் என்னும் நிலை உருவாயிற்று.இதில் ஒரு வலையம் (net) பழுதுபட்டால் ஏனைய வலையங்கள் வேலைசெய்யும்.இது நன்கு பரவியது.வணிக அமைப்புகள்,பல்கலைக்கழகங்கள் முதலிய கல்வி நிலையங்கள் இணையத்தைப் பயன்படுத்திப் பெருநன்மை பெறலாயின.ஆக,இணையம் 40 ஆண்டு நடைமுறை வரலாறு உடையது. தமிழக அரசும் 1999 இல் தமிழ் இணையத்தைத் தொடங்கியுள்ளது.ஆந்திராவும் இதில் முன்னோடியாக உள்ளது.பிற மாநிலங்களும் இதில் நாட்டம் செலுத்தி வருகின்றன. இணையம் இன்று உலகத்தைத் தன் கைக்குள் வைத்துள்ளது.இதன் தந்தை விண்டன் செர்ஃப்.பா.Computer, history of.

internet magazines, Tamil - தமிழ் இணைய இதழ்கள் :' பல இதழ்கள் உள்ளன.மேலும் பல வர உள்ளன. எ-டு மின்னம்பலம். அனைத்துலகத் தமிழ் இதழ். சென்னையிலுள்ள டிஷ் நட் வெளியிடுகிறது. பா. Tamil internet.

internet pirates - இணைய திருடர்கள் : இணையக் குற்றங்கள் செய்பவர்.இவற்றைப் போக்க டிவிடி வட்டு உதவும்.

internet service provider, ISP - இணையப்பணி வழங்குபவர், இபவ: இந்த அமைப்பு குறிப்பிட்ட கட்டணத்தில் தங்கள் இணையத்தைப் பயன் படுத்திக் கொள்ள பயனாளிக்கு அனுமதி வழங்கும். இதைப் பயன்படுத்துபவர் இந்த அமைப்பில் தன் பெயரைப் பதிவு செய்துகொள்ள வேண்டும். பதிவு முடிந்தவுடன் இப்பணி வழங்குபவர் பின் வருவன வற்றைப் பயன்படுத்துபவர்களுக்கு அளிப்பார்.

1) பயனாளி : தனித்த பெயர்

2) கடவுச் சொல் : மறைவு குறிமுறை

3) மின்னஞ்சல் முகவரி