பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ISO

137

item


யமைவை அமைக்க உதவுவது. வருங்கால உலகின் மெய்யான தொலைத் தொடர்புத் தேவைகளுக்குரிய தீர்வை அளிப்பது. இது நம்புமை அளிப்பது, உடன் தகவல் இணைப்பைத் தருவது. மிக விரைவான ஒப்புமை இரு செயலியைவிட (மோடம்), இந்த இணைப்பி பல மடங்கு விரைவுள்ளது. தற்பொழுது உலகிலுள்ள அகக் கட்டமைப்பு மூலமோ குரல் மூலமோ நகல் மூலமோ நடைபெறுவது. பா. CSI, VSNL, ISP.

ISO, International Standards Organization - அனைத்துலகத் தர அமைப்பு, அதஅ : ஓர் அனைத்துலக முகமையகம். அமெரிக்க அன்சைபோல் (ANSI - American National Standards Institute) சிறப்பாக இயங்குவது தகவல் பரிமாற்றத்திற்குரிய தரங்களை உருவாக்கி வருவது. எ-டு உருக்குறிமுறை.

IT, Information Technology - ஐடி, தகவல் தொழில்நுட்பவியல் : மின்னணுவியல், கணித்தல், தொலைத்தொடர்பு ஆகிய மூன்றின் கூட்டு. இதன் மூளைக் கணிப்பொறி. வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் பெரும் புரட்சி உண்டு பண்ணி வருவது. நாம் தற்போது தகவல் தொழில்நுட்ப காலத்தில் வாழ்கின்றோம். வருங்காலத்தில் தகவல்கள் பெருகுமே தவிரக் குறையா.

IT Act - தொழில்நுட்பவியல் சட்டம் : தொழில்நுட்பவியலில் நடைபெறும் குற்றங்களைத் தடுக்க இந்திய அரசு இயற்றியச் சட்டம். ஐ. நா. முன்மாதிரிச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டது.குறிப்பாக இணையக் குற்றங்களைத் தடுக்க இச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. 17-10-2000 அன்று நடைமுறைக்கு வந்தது.

IT Business Network - தொழில்நுட்ப வணிக இணையம் : 19-10-2000 அன்று இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் ஒரு முறை சாரா உடன்பாட்டுக் குறிப்பாணையில் கையெழுத்திட்டன. இது தொழில்நுட்ப வணிகம் பற்றியது. இதற்கு இணையம் அமைக்கப்படும். இருநாடுகளிலுள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் தொழிலைப் பெருக்க இவ்விணையம் உதவும்.

item - A single unit of information தகவல் இனம் : ஒரு தனிச் செய்தியலகு.

item advance - A method used for operating successively upon a group of items in memory. தகவல் இனம் முற்பாடு : நினைவகத்திலுள்ள இனத் தொகுதியில் அடுத்தடுத்து மேற்கொள்ளும் செயலுக்குரிய முறை.