பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

adv

14

ali

அமைந்த கோப்புகளைக் காண நமக்கு உதவும் விருப்பம்.

adventure - A popular computer game.
பரபரப்பு விளையாட்டு : அனைவரும் விரும்பும் கணிப்பொறி விளையாட்டு.

agenda - The sequence of control statements required for the solution of a computer problem.
செயல்நிரல் : கட்டுப்பாட்டுக் கூற்றுகளின் தொடர்; கணிப்பொறிச் சிக்கலைத் தீர்க்கப் பயன்படுவது.

algebraic manipulation language - A programming language used to solve analytic problems.
இயற்கணிதக் கையாளல் மொழி : பகுப்புச் சிக்கல்களுக்குத் தீர்வு காணப் பயன்படும் நிகழ்நிரல் மொழி.

ALGOL, algorithmic language - A high level language used mainly for mathematical and scientific applications.
ஆல்கால், விதிமுறை மொழி : கணித மற்றும் அறிவியல் பயன்பாடுகளுக்கு உதவும் உயர் நிலை மொழி. வழிமுறை மொழி என்றுங் கூறலாம்.

algorithm - In computer programming it is a list of instructions to solve a problem.
விதிமுறை : கணிப்பொறி நிரலாக்கலில் ஒரு சிக்கலைத் தீர்ப்பதற்குரிய ஆணைக் குறிப்புப் பட்டியல்

algorithm, properties of -
விதிமுறைப்பண்புகள் :1)குறிப்பிட்ட எண்ணிக்கையில் இருத்தல். 2) ஒவ்வொரு வழியும் குழப்பத்திற்கு இடமில்லாமல் நிறைவேற்றப்பட வேண்டும்.3) குறிப்பிட்ட நேரத்தில் ஒவ்வொரு வழியும் நிறைவேற்றப்படவேண்டும். இதற்கு குறிப்பிட்ட அளவு நினைவக இடத்தைப் பயன்படுத்தவேண்டும்.4) குறிப்பிட்ட அளவு நேரத்தில் முழு நிகழ்நிரலும் முடிக்கப்பட வேண்டும்.

alignment - The process of adjusting components of a system for proper interrelationship.
வரிசையாக்கம் : உரிய இடைத்தொடர்புக்கு ஒரு தொகுதியின் பகுதிகளைச் சரிசெய்யும் முறை.

align attribute -
வரிசையாக்க இயல்பு : ஒரு பக்கத்தில் பாடத் தொடர்பாகப் படம் எங்கு இருக்க வேண்டும் என்பதை இது மேய்விக்குக் கூறுவது, இடப்பக்கமாக அமைவது.

alink attribute -
வினையுறு இணைப்பு இயல்பு : சுட்டெலியை இணைப்பில் தட்டும்பொழுது, அது வினையுறு இணைப்பு ஆகிறது. தவறு என்பதன் மூலம் இணைய