பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

laser

143

Lei


Laser printer : லேசர் அச்சியற்றி : இதில் மின்னணு முறையில் கட்டுப்படுத்தப்படும் லேசர் ஒளிக்கற்றை அச்சிடவேண்டிய உருவின் மேல்விழும். ஒளிகடத்தும் உருளையில் அச்சியற்றல் நடைபெறுவது. குறைவிரைவு லேசர் அச்சியற்றி ஒரு நிமிக்கு 4-16 பக்கங்கள் அச்சிடும். உயர் விரைவு அச்சியற்றி ஒரு நிமிக்கு 10,000 வரிகள் அச்சிடும். லேசர் அச்சியற்றியில் அச்சுத் தலை இல்லை. ஆகவே, இது தாக்கா அச்சியற்றி எனப்படும். இதில் கிடைக்கும் வெளிப்பலன் மிக நேர்த்தியாக இருக்கும் ஒ.inkjet printer.

laser printing -லேசர் ஒளியச்சு :லேசர் ஒளியால் நடைபெறுவது; கணிப்பொறிவழி நடைபெறுவது. அச்சுத்துறையில் ஒரு பெரும் மாற்றத்தை உண்டாக்கியது பா. Deskto printing.

last in first out, LIFO -கடைசியில் வந்தது முதலில் வருதல், கவமுவ : ஒரு நினைவகத்தில் செய்தியைச் சேமிக்கும் மீட்கும் முறை. இதில் கடைசியில் சேமிக்கப்பட்ட தகவல் முதலில் மீட்கப்படும்

ஒ. first in first out.

latency : The time delay required for an even to be initiated from the moment when the event is called.

உள்ளுறை காலம் : ஒரு நிகழ்வு கோரப்படும் பொழுது, அது தொடங்கத் தேவைப்படும் தாமத நேரம்.

lattice file : தட்டிக் கோப்பு : ஓர் இயங்கு தொகுதியிலுள்ளது. இதில் தனி ஆவணங்கள் ஒன்றிற்கு மேற்பட்ட உரிமையாளரைக் கொண்டிருக்கும்.

layout : வடிவரை : ஒரு மின் சுற்றின் வடிவமைப்பு. அச்சுச் சுற்றுப் பலகையிலுள்ள பகுதி களின் வடிவமைப்பு.

leader : முன் செல்லகம் : 1) துளையிடப்படாத நீள்தாள். தாள் நாடாச் சுருளில் பதிவு செய்யப்பட்ட தகவலுக்கு முன் செல்வது. இதில் ஊட்டத் துளைகள் மட்டுமே இருக்கும். 2) ஆவணத் தொகுதிக்கு முன் செல்லும் ஆவணம். தொகுதிக்குப் பொதுவான தகவலைத் தருவது. leap frog tesi -தாவுதவளை ஆய்வு : நினைவகத்திலுள்ள நிகழ்நிரலால் நிறைவேற்றப் படும் ஆய்வு. வேறுபட்ட இடங்களில் இது மேலும் ஆய்வுகளை நடத்தும். பின் தான் மற்றொரு நினைவுப் பகுதிக்குச் செல்லும், ஏனைய இடங்களில் மேலும் ஆய்வுகளைத் தொடரச் செய்யும்.

leg - கால் : நடைமுறைச் செயலிலுள்ள ஒட்டு.

Leibniz wheel - லிப்ளிஸ்