பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

leg

144

lib


ஆழி : கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகிய நான்கு அடிப்படைச் செயல்களைத் திருத்தமாகச் செய்ய வல்லது. அமைத்தவர் லிப்னிஸ் (1646 - 1716) ஜெர்மன் மெய்யறிவாளர், கணித அறிஞர். பா. computer, history of .

length-நீளம் : உருக்களின் எண்ணிக்கை சொல்லையோ ஆவணத்தையோ உருவாக்குவது.

letter quality printer -எழுத்துத்தர அச்சியற்றி : இதில் உருக்கள் தொடருக்குரிய வரிகளில் குறிக்கப்படும். ஆகவே, வெளிப்பயன் நன்றாக இருக்கும். எ-டு மைப்பீச்சு அச்சி யற்றி.

librarian -திரட்டகர் :திரட்டகத்தைக் கட்டுப்படுத்துபவர். இதில் எல்லாக் காந்தக் கோப்புகளும் நிகழ்நிரல்களும் வைக்கப்பட்டிருக்கும்.

librarian programme -திரட்டகர் நிகழ்நிரல் : ஒரு குறிப்பிட்ட கணிப்பொறியின் இயங்கு தொகுதியின் பகுதியாக அமையும் நிகழ்நிரல்.

library - திரட்டகம் : நிகழ்நிரல் தொகுப்பு, பயன்பாட்டு நிகழ் நிரலால் பயன்படுத்தப்படுவது.

library functions -திரட்டகச்சார்பலன்கள் : சி மொழியில் அனுமதிக்கப்படும் சி கணிதச்சார்புகள். இவை உள்ளார்ந்த பண்புள்ளவை. தொகுப்பி இவற்றை மதிப்பீடுசெய்யும். ஒரு நிகழ்நிரலர் ஒவ்வொரு சார்பலனின் மதிப்பையும் கருத்தில் கொள்ளவேண்டும். ஏனெனில், சார்பலன் இம்மதிப்பைச் செயற்படுத்தவேண்டியுள்ளது. இம்மதிப்பு சார்பின் மாறி எனப்படும். ஒவ்வொரு சார்பலனுக்கும் ஒவ்வொரு வகைச் சார்பின்மாறி உண்டு. ஒவ்வொரு சார்பலனும் குறிப்பிட்ட வகை முடிவை உண்டாக்குவது. எ-டு சைன், காஸ், டேன். சி நிகழ்நிரலிலிருந்து இச்சார்பலன்களில் எந்த ஒன்றையும் பெறலாம். இதற்குக் குறிப்பிட்ட தலைக்குறிப்புக் கோப்பைச் சேர்க்கவேண்டும். சரக்கையாளலுக்கும் கணிதக் கணக்கீடுகளுக்குமுள்ள சார் பலன் களை இக்கோப்பு கொண்டிருக்கும். இச்சார்பலன்கள் மொத்தம் 41.

library functions, kinds of -திரட்டகச் சார்பலன்களின் வகைகள்: இவை பின்வருமாறு. 1. நன்கறிந்தவை: சைன், காஸ், டேன். 2 முக்கோணவியல் சார்ப்லன்கள்: டோசை, டோலோவர், டோப்பா, 3) தலைக்குறிப்புச் சார்ந்தவை. (i) ஸ்ட்டியோ எச் கெட்ஸ், புட்ஸ். (ii) ஸ்ட்ரிப் எச்- ரேண்ட்.