பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

M-Com

153

mem


M-Commerce - எம் வணிகம் : நடமாடும் வணிகம். கைத்தொலைப்பேசி, இருவழி வானொலி ஆகியவை மூலம் நடைபெறும் தொழில், பா. tele conferencing, telemedicine, teleshopping.

mean repair time - சராசரி பழுதுநேரம் : கொடுக்கப்பட்ட காலத்தில் அலகுத் தவறு தல்களுக்கும் ஓர் அலகைப் பேணுவதற்குச் செலவிடப்படும் நேரத்திற்கும் உள்ள வீதம்.

mechanical digital calculator - எந்திரத் இலக்கக் கணிப்பொறி : கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகிய அடிப்படைச் செயல்களைச் செய்யவல்ல கருவி.

media conversion - ஊடக மாற்றம் : ஒரு சேமிப்பிலிருந்து மற்றொரு சேமிப்பிற்குத் தகவல் செல்லுதல். எ.டு. துளையிட்ட அட்டையிலிருந்து காந்த நாடாவுக்குச் செல்லுதல்

media eraser - Electro magnetic device to erase stored data. ஊடக அழிப்பி : சேமித்த தகவலை அழிப்பதற்குரிய மின் காந்தக் கருவியமைப்பு.

medium - A material holding information eg. magnetic tape. ஊடகம் : செய்தியைக் கொண்டுள்ள பொருள். எ-டு. காந்தநாடா.

medium scale integration, MSI - நடு அளவுத் தொகையாக்கல் : ஒருங்கிணைசுற்றுகளை உருவாக்கல், இவை நறுவலில் 20-100 முறைமை வாயில்களுக் கிடையே அமையும்.

medium speed - Data transmission rates between 600 and 4800 bits per second. நடு விரைவு : ஒரு வினாடிக்கு 600 - 4800 இருமிகள் உள்ள தகவல் செலுத்துகை.

mega bit - A quantity of binary data equal to 1 million (10%) bits. மெகாபிட் : ஒர் மில்லியன் பிட்டுகளுக்குச் (10) சமமான இருமத்தகவல்களின் அளவு. தற்காலக் கணிப்பொறி நினைவுக்கருவியமைப்புகள், இந்த அளவுத் தகவல்களைச் சேமிக்கவல்லவை.

mega byte, MB - A quantity of computer data equal to 1 million (10°) bytes, Present day floppy disks store this much data. மெகாபைட் : 1 மில்லியன் பைட்டுகளுக்குச் (10) சமமான கணிப்பொறித் தகவல்கள் அளவு. தற்கால மென்வட்டுகள் இந்த அளவுத் தகவல்களைச் சேமிக்கவல்லவை.

memory - The part of a computer system holding data and instructions for future use in