பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

mirco

156

mill


செல்செய்தி : மூலத்திற்கும் இலக்கிற்கும் இடையே செல்ல வேண்டிய செய்தி.


micro - micro processor, micro computer. - நுண்மி : நுண்முறையாக்கி, நுண்கணிப்பொறி.


micro chip - silicon chip. நுண்நறுவல் : சிலிகன் நறுவல்.


micro code - micro structure. நுண்குறிமுறை : நுண் கட்டளை.


micro computer - நுண் கணிப்பொறி : கையில் எடுத்துச் செல்லக் கூடிய கணிப்பொறி.


micro computer architecture - நுண்கணிப்பொறிக் கட்டமைப்பு : இந்த அமைப்பு 8 பிட், 16 பிட், 32 பிட் எனக் குறிப்பிடப்படும்.


micro film - நுண்படலம் : வெளிப்பலன் கருவி.


micro fiche - நுண்படல அட்டை : வெளிப்பலன் கருவி.


micro processor - நுண்முறையாக்கி : இதில் பேரளவு சுற்றுகளும் மீப்பேரளவு சுற்றுகளும் உள்ளன. 1960-இல் அமைக்கப்பட்டது. அமைத்தவர்கள் ஜான் ஜி கெமினி, தாமஸ் குர்ட்ஸ். இது பலவகை : இண்டல் (1971-ல் தொடங்கியது) பிளாட்டினம் முதலியவை. பா. computer, history of.


micro programme - A sequence written in micro instructions and stored in the control unit of the micro-processor. - நுண் நிகழ்நிரல் : நுண் கட்டளைகளில் வரிசையாக எழுதி நுண் முறையாக்கியின் கட்டுப்பாட்டு அலகில் சேமித்து வைக்கப்படுவது.


Microsoft Corporation - மைக்ரோ சாஃப்ட் கழகம் : உலகின் மிகப் பெரியதும் வெற்றி நடைபோடுவதுமான மென்பொருள் நிறுவனம். இதில் 32,000 பேர் வேலை செய்கின்றனர். இதை நிறுவியவர் பில் கேட்ஸ், இவரே இதன் தலைவர். பா.Bill Gates.


millennium bug - 2000 ஆம் ஆண்டுப் பிழை : எண் 1999 லிருந்து 2000 க்குச் செல்லும் பொழுது ஏற்படும் எண் மாற்றம் சரிசெய்யப்படாதிருந்தால், கணிப்பொறிகள் பெரும் அழிவை நோக்கும் எனக் கணிப்பொறி அறிஞர்கள் கூறினர். இது ஒர் ஆற்றல் வாய்ந்த கணினிப்பிழை. Y2K எனக் கணிப்பொறித் தொழில் சுருக்கெழுத்தால் குறிப்பிடப்படும். ஒரெண் மாற்றத்தால் ஏற்பட்ட பெருங் குழப்பம். இக்குழப்பம் எவ்வகைப் பேரிழப்புமின்றி, இனிதே நீக்கப்பட்டுவிட்டது. அனைவரும் அஞ்சிய அளவுக்கு ஒன்றும்