பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

mov

160

MTN


சுட்டெலிப் பொத்தானை விடு விக்கும் பொழுது ஏற்படுவது.

7) சுட்டெலி நகர்வு (Mouse move)- ஒரு பொருளின்மீது சுட்டெலியை நகர்த்தும் பொழுது உண்டாவது. இப் பொழுது பொத்தான்கள் அழுத்தப்பட்டிருக்கா.

moving - நகர்த்தல் : ஓர் ஆவணத்தின் பல பகுதிகளைத் திறவுபலகைக் குறுக்கு வழிகள் அல்லது சுட்டெலியைப் பயன்படுத்திப் பயனாளி அசைத்தல்.

MS-DOS - எம் டிஓஎஸ் : வட்டு இயக்க அமைப்பு. அண்மைக்காலம் வரை தனியாள் கணிப்பொறிகளில் ஒரு பரவலான இயக்கு அமைப்பாகவே இருந்தது. பல விளையாட்டுகளுக்கு நிலைக்களம்.

MS Front Page Express - எம்எஸ் முன்பக்க விரைவி : எளிதாகக் கையாளக் கூடிய வலையப் பக்கப் பதிப்பியற்றி இது வைசிவிக் (WYSIWYG - What You Seels What You Get) என்னும் நெறிமுறையில் வேலை செய்கிறது. ஒரு பக்கத்தினை வடிவமைக்கும் பொழுது, அது திரையில் எப்படிக் காட்சியளிக்கிறதோ அப்படியே மேய்வியிலும் காட்சியளிக்கும். இதனால் நாம் மேற்கொள்ளும் வடிவமைப்பு எளிதாகிறது. இதன் நன்மைகளாவன;

1) நுண்படங்களைத் தட்டிப் பாடம், பத்திகள் ஆகிய இரண்டையும் படிவமைப்பு செய்யலாம்.

2) பெரும்பாலான எச்டிஎம் எல் ஒட்டுகளுக்குரிய நுண் படங்கள் கொண்ட கருவிப் பட்டைகள் உள்ளன. இவற்றைப் பயன்படுத்தலாம்; ஒட்டுகளை அச்சடிக்க வேண்டியதில்லை.

3) அணியப்படங்களையும் செருகலாம்.

4) ஒரு கணிப்பொறியிலிருந்தோ ஒரு வலையமைவிலுள்ள கணிப்பொறிகளைக் கொண்டோ இருப்பிலுள்ள பிற வலையப் பக்கங்களைத் திறக்கலாம்.

5) இவ்விரைவியுடன் தனியாள் தொடக்கப் பக்க மாயாவியும் உள்ளது. இம் மாயாவி நம்மைப் பல கேள்விகள் கேட்கும்; படிப்படியாகத் தொடக்கப்பக்கத்தை உருவாக்க நம்மை அழைத்துச் செல்லும்.

MSGBOX - செய்திப்பெட்டி : பயனாளிக்கு வேண்டிய பயனுள்ள செய்தியை அளிப்பது.

MSGBOX function - செய்திப்பெட்டிச் சார்பலன் : பயன் பாட்டை நிறைவேற்றும் பொழுது, ஒரு செய்தியைக் காட்டப் பயன்படும் சிறந்த வழி.

MTN - Maganagar Telephone