பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ΜΤΧ

161

NAND



Nigam Ltd. - எம்டி என்,மகா நகர் தொலைபேசி நிகம் நிறு வனம் (வரையறை) : மும்பை, தில்லி ஆகிய இரண்டு இடங்களிலும் தொலைத் தொடர்புப் பணிகளை வழங்குவது.

MTX - எம்டிஎக்ஸ் : விரும்பு பிழைக்கு அடுத்ததாகப் பரவிய கணிப்பொறிப் பிழை. மின்னஞ்சல் வழியாகப் பரவியது. நீக்கப்பட்டது (செப் 7, 2000) பா. love bug, millennium bug.

multiaddress instruction - An instruction specifying the address of more than one operand.- பன்ம முகவரிக் கட்டளை: ஒரு செயலிக்கு மேல் உள்ள முகவரியைக் குறிப்பிடும் கட்டளை.

multiple length arithmetic -பன்ம நீள எண்கணிதம் : ஒவ்வொரு செயலியையும் சேமிக்க ஒன்றிற்கு மேற்பட்ட எந்திரச் சொற்களைப் பயன்படுத்தி நிறைவேற்றும் எண் கணிதம். நோக்கம் அதிகத் துல்லியம் பெறுதல்.

multiline text area - பன்ம வழிப்பாடப் பகுதி : உட்பலன் பயனாளியிடமிருந்து பல வழிகளுக்குச் செல்லப் பயன்படும் கட்டுப்பாடு.

multiplex - பன்மப் பகுதி : பலவழிகள் மூலம் தகவல்கள் செல்லுதல். குறைந்த விரைவுச் சேமிப்புக் கருவியமைப்பிலிருந்து உயர் விரைவுச் சேமிப்புக் கருவிக்குச் செல்பவை.

multiplicand - பெருக்கப்படும் எண் : பெருக்கலில் பயன்படும் காரணிகளில் ஒன்று. ஓர் அளவை மற்றொரு அளவால் பெருக்குதல்.


N

name - பெயர் : பாடப் பெட்டி யின் இயல்பு புலப் பெயரைக் குறிப்பிடுவது. இப்புலத்தில் பதிவு செய்யப்படும் பாடம் சேமிக்கப்படும்

NAND gate - A decision making building block in digital circuits. It produces an output of binary 1 when one or more of its inputs are at binary 0. and an output of binary 0 when all its inputs are of binary 1. NAND gates are generally used in itegrated circuit packages.

இல்லது வாயில் : உம் வாயிலுக்கு எதிரானது. இயக்கச் சுற்றில் முடிவு செய்யும் கட்டு மானத்தொகுதி. ஒன்றுக்கு மேற்பட்ட இதன் உட்பலன்கள் இரும 0 இல் இருக்கும் பொழுது, 1 என்னும் வெளிப் பலனை உண்டாக்கும். அதன் எல்லா உட்பலன்களும் இரும 1 இல் இருக்கும் பொழுது