பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

nan

162

nest


இரும 0 வெளிப்பலனை உண்டாக்கும். பொதுவாக, இல்லது வாயில்கள் ஒருங்கிணை சுற்றுச் சிப்பங்களில் பயன்படுபவை

nanosecond, ns - நேனோ வினாடி, நேவி : ஒரு வினாடியில் 1 ஆயிரம் மில்லியனாவதற்குச் சமமான கால இடைவேளை (10-9). 1 மீட்டர் தொலைவைக் கடக்கக் கதிரவன் ஒளிக்கு ஆகும் நேரம் 3 நேனோ வினாடிகள்.

Napster - நேப்ஸ்டர் : கோப்புப் பகிர்வுப் பணியகம். இசைக் கோப்புகளைப் பயனாளிகள் தங்களுக்குள் பகிர்ந்து கொள்ளப் பயன்படுவது.

пarrative - விளக்கவுரை : ஒரு நிகழ்நிரலின் குறிமுறையில் சேர்க்கப்ப்ட்டுள்ள கூற்றுகள். குறிமுறைச் செயல்களின் விளக்க ஆவணமாக்கலாகப் பயன்படுவது.

NASSCOM - நாஸ்காம் : பணி நிறுவனங்களின் மென்பொருள் தேசியக் கழகம். இதன் கருத்துப்படி தற்பொழுது இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் இந்தியாவில் 1 மில்லியன். இது 2003க்குள் 23 மில்லியனாக உயரும்.

native language - இயல் மொழி : ஒரு கணிப்பொறி மொழி, ஒரு வகைக் கணிப் பொறிக்காக உருவாக்கப்பட்டது. கணிப்பொறித் தொகுதியிலுள்ள மென்பொருள் எல்லைக்கு ஏற்றவாறு மொழிமுறை சரியாக ஒருங்கிணைக்கப்பட்டிருக்கும்.

Naviscope - நேவிநோக்கி : ஒன்றில் பல வேலைகளைச் செய்வது. வெப்ப மேய்தல் செயலை விரைவுப்படுத்துவது. ஆவணங்களை வளையத்திலிருந்து மீட்டுச் செப்பமாக்க மேய்விக்கு அனுப்புவது.

needle printer - ஊசி அச்சியற்றி : இது ஓர் அச்சியற்றுங் கருவி. இதில் ஊசிகள் தாளிலும் நாடாவிலும் குத்துவதால் உருக்கள் உண்டாகின்றன.

negation - எதிர்மை : ஒரு தனிச் செயலிடத்தில் நிறைவேற்றப்படும் செயல். உண்டாகும் முடிவு ஒவ்வொரு இலக்க நிலையிலும் தலைகீழாக இருக்கும். எ-டு பிட்கோலம் P : 01 010 இது r:101001 ஆகத் தோன்றும்.

negator - எதிர்மையாக்கி : ஒரு முறைமைக் கூறு. ஓர் இரும உட்பலன் குறிகை கொண்டது. எதிர்மறைக்குறிகையுள்ள ஓர் தனி இரும வெளிப் பலனைக் கொடுக்கும். இதன் பொருள் : ஒரு பிட்டை உட்பலனாகப் பயன்படுத்த, சுழிப்பிட் வெளிப் பலனாக உண்டாகும்.

nesting - கூட்டில் வைத்தல் : ஒரு நிகழ்நிரலின் ஒரு பகுதி