பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/17

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ani
anu
17

எழுச்சியூட்டும் கட்டுப்பாடு: இதைக்கொண்டு பயனாளி வரிசையாக ஏவிஐ நறுவல்கள், சிறுபடங்கள் ஆகியவற்றைத் திரையில் காட்ட இயலும், எழுச்சியூட்டலை உருவாக்க இயலும்.

animation control, optional parameters of-
எழுச்சியூட்டும் கட்டுப்பாட்டின் தெரிவுச் சுட்டளவுகள்: இவை மூன்று. 1) திரும்பச்செய், 2) தொடங்கு 3) நிறுத்து.

animatronics -
எழுச்சிமிகு மின்னணுத்தொலைஇயல் : இச்சொல் animation, electronics, robotics ஆகிய மூன்று சொற்களின் தொகுப்பு. தவிர, இது ஒரு தொகுப்புத் தொழில் துட்பம், இறப்பு,நிகழ்வு,எதிர்வு ஆகிய மூன்று காலங்களிலும் கற்பனை உண்மையைக் காட்டுவது. மிகப்புதிய அறிவியல் துறை (17-10-2000).

Anjal -
அஞ்சல்: தமிழ் மின் னஞ்சல் பணி, பதிவுபெற்ற பயனாளிகள் 25,000.

annotation - Explanation added to a programme to help the reader.
விளக்கவுரை: வாசகருக்கு உதவ ஒரு நிகழ்நிரலோடு சேர்க்கப்படும் விளக்கம்.

ANSI, American Standards Institute - A committee designing standards for data processing.
ஆன்சி, அமெரிக்கத் தர நிலையம்: தகவல் முறையாக்கலை வரையறைப்படுத்தும் குழு.

anti piracy software-
கள்ள எதிர்ப்பு மென்பொருள்: மென்பொருள்கள் கள்ளத்தனமாகக் கையாளப்படுகிறது. இதைத் தடுக்க இம்மென்பொருள் பயன்படுகிறது. இது ஒரு பாதுகாப்புமுறை. யாரும் உரிமையில்லாமல் இதை அணுக இயலாது. டில்லி, உற்பத்தித் திறன் மன்றம் உருவாக்கியுள்ள எண் சுருள் சுற்று (DSW-Digital Spring Winding) என்னும் கருவியமைப்பைக் கொண்டு இத்திருட்டை தடுக்கலாம்.

Anto Peter.M-
எம்.ஆண்டோ பீட்டர்:துத்துக்குடியைச் சார்ந்தவர். தமிழில் தணியா ஆர்வங்கொண்டு கணிப்பொறித் தமிழை நாளும் வளர்த்து வருபவர். இவர் தொடங்கிய தமிழ் சினிமா முதல் தமிழ் இணைய இதழ் என்று சொல்லலாம். இவரிடம் 300 வகைத் தமிழ் அச்செழுத்துகளும் 1500 கேளிக்கைக் கலைகளும் உள்ளன. கணிப்பொறித்தமிழ் உலகில் இவருக்கு நல்ல பெயர்.

Anugraphics-
அனுவரைகலை : உரிமையாளர் முரளிகிருட்டினன் இந்திய மொழிகளில் கணிப்பொறி அச்செழுத்துகளை உருவாக்கி வருகிறார். அனு எழுத்துகள் அனைவரும்