பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

oper

170

opt


எடுத்துக்காட்டு : கூட்டு, பெருக்கு.


operation cycle - இயக்கச் சுழற்சி : நினைவகச் சுழற்சியின் பகுதி. பெருக்கல், கழித்தல் முதலிய செயல்கள் நடைபெறுபவை.


operation register - இயக்கப் பதிவகம் : இப்பதிவகத்தில், இயக்கச் சுழற்சியின் பொழுது, இயக்கக் குறிமை பதிவு செய்யப்படும்.


operation time - இயக்க நேரம் : ஒரு குறிப்பிட்ட செயலுக்கு இயக்கச் சுழற்சியை நிறைவேற்றத் தேவைப்படும். நேரம்.


operator - செயலி : முறைமை அல்லது கணிதக்குறி அல்லது உரு ஆகும். இது ஒரு செயலிடத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய செயலைக் குறிக்கும். எடுத்துக்காட்டு : +, −, x, AND, OR.


operator, comma - காற்புள்ளிச் செயலி : செயலிகளில் ஒரு வகை.


operator, kinds of - செயலி வகைகள் : இவை பின்வருமாறு.

1) எண்கணிதச் செயலிகள் : இவை எண்முடிவுகளைத் தருபவை. எடுத்துக்காட்டு : + கூட்டல், 1 + 1.

2) ஒப்பீட்டுச் செயலிகள் : இவை மெய் அல்லது பொய் முடிவுகளைத் தெரிவிப்பவை. எடுத்துக்காட்டு : = சமம், A1 = B1.

3) பாடச் செயலிகள் : இவை முழுப் பாடத்திற்கும் பாடப் பகுதிகளைச் சேர்ப்பவை. எடுத்துக்காட்டு : & (AND), பாடச்செயலி, ஸ்டார் மற்றும் ஆபீஸ், ஸ்டார் ஆபீசைக் கொடுக்கும்.

4) பார்வைச் செயலிகள் : கணிப்பொறியின் நுண்ணறைகளைச் சேர்ப்பவை. எடுத்துக்காட்டு : அரைப்புள்ளி எல்லை A1 : C 108.


optical character recognition, OCR - ஒளியுரு அறிதல், ஒஉஅ : கையால் எழுதிய அல்லது அச்சிட்ட தகவலைக் கணிப்பொறிக்குள் செலுத்தும் முறை. இதற்கு ஒளி இருமுனை வாய்கள் பயன்படுகின்றன. தாளில் மறிக்கப்படும் ஒளி மாறுபாட்டை இவை அறியபவை.


optical disk - ஒளிவட்டு : ஒளிச்சேமிப்பைப் பயன்படுத்தும் வட்டு.


optical mark reading and recognition - ஒளிக்குறி படித்தலும் அறிதலும் : இம்முறையில் பென்சிலால் 2 போன்ற குறிகளைக் குறிக்கப் போதுமான கட்டங்கள் கொண்டதும் முன்னரே அச்சிடப்பட்டதுமான படிவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவ்வகை ஆவணங்கள் ஆவணப்படிப்பி மூலம் படிக்கப்பட்டு, ஆவணத்திலுள்ள குறிகள் மின்துடிப்புகளாக