பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Out

173

over


Outlook Express - பார்வை விரைவி : இது ஒரு நிகழ்நிரல் மின் அஞ்சலை அனுப்பப் பயன்படுவது. செய்திகளைக் கோத்து அனுப்பலாம். பெறும் செய்திகளைப் பார்வையும் இடலாம். இதன் பிற இயல்புகளாவன.

1) செய்திகளுடன் கோப்புகளை இணைப்பது.

2) அனுப்புவதற்கு முன் செய்திகள் பிழையில்லாமல் இருக்குமாறு செய்கிறது.

3) செய்தியை ஏனையவருக்கு அனுப்புகிறது.

4) மின்னஞ்சல் முகவரிகளைக் கொண்டது.

output - வெளிப்பலன் : கணிப்பொறி உண்டாக்கும் விடுவரல்.

output devices - வெளிப்பலன் கருவியமைப்புகள் : இவை கண்காணிப்பிகளும் அச்சியற்றிகளும் ஆகும். கண்காணிப்பிகள் தகவல்களைத் திரையில் காட்டுபவை. இக்காட்டுகை தொலைக்காட்சி போல் தெரியும். இவற்றின் உயர் பகுப்பு 1280 X 1024 குறும்படங்கள். இவை ஒற்றை நிறக் கண்காணிப்பி பல நிறக் கண்காணிப்பி என இருவகை. உட்பலனை வெளிப்பலனாக அச்சிடுபவை. இவை வரி அச்சியற்றிகள், தொடர் அச்சியற்றிகள், எழுத்துத்தர அச்சியற்றிகள், லேசர் அச்சியற்றிகள் என நான்கு வகை.

output functions - வெளிப்பலன் சார்புகள் : இவை கணக்கிடப்பட்ட விளை பயன்கள். இவற்றில் ஒன்று printf(). இது சரம், எண், உரு ஆகியவற்றை அச்சியற்றப் பயன்படுவது. இதன் பொதுப் படிவ அமைப்பு பின்வருமாறு. Printf ("format string", var 1, var 2.... varn); ஒ. input functions.

output programme - வெளிப்பலன் நிகழ்நிரல் : வெளிப்பலன் கருவியமைப்புக்குச் சிறப்பாக எழுதப்படும் நிகழ்நிரல்.

output record - வெளிப்பலன் ஆவணம் : வெளிப்புறக் கருவியமைப்புக்கு எழுதப்படும் ஆவணம்.

output unit - வெளிப்பலன் அலகு : நினைவக அலகில் சேமித்து வைக்கப்படும் ஒ. input unit

overflow - வழிந்தோடல் : இது எண்கணிதச் செயலால் ஏற்படுவது. இதில் ஓர் எண் இயற்றப்படும். இந்த எண் எந்திரத்தின் வன்பொருள் சொல் அல்லது மென்பொருள் சொல் அளவு வரம்புகளுக்குப் பெரிதாக அமையும்.

overlay - மேலமைத்தல் : முதன்மை நினைவகத்திற்கு நடைமுறைச் செயல்களைக்