பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
App
app
18

அறிந்த தமிழ் அச்செழுத்துகள்.

Apple-
ஆப்பிள்:இது ஒரு தனியாள் கணிப்பொறி, 1975இல் ஸ்டீவ் ஜான், ஸ்டீபன் வோஸ்னியக் ஆகிய இருவரும் இதைப்புனைந்தனர்.

APL- A high level language meant for mathematical operations.
ஏபில்: ஓர் உயர்நிலை மொழி. கணிதச் செயல்களுக்காக உள்ளது.

application - A programme doing some useful task. It has a large number of objects like form, controls, and menus. The small sections of code control these objects.
பயன்பாடு: இது பயனுள்ள பணியைச் செய்யும் நிகழ்நிரல்,படிவங்கள், கட்டுப்பாடுகள்,பட்டிகள் முதலிய பல பொருள்களைக் கொண்டது. குறிமுறையின் சிறு பகுதிகள் இப்பொருள்களைக் கட்டுப்படுத்துபவை.

application file -
பயன்பாட்டுக் கோப்பு : வேறுபெயர் நிகழ் நிரல் கோப்பு. ஏதாவது ஒன்றை நாம் செய்ய உதவுவது. எ-டு விளையாட கணக்கீடுகள் செய்ய.

application programme-
பயன்பாட்டு நிகழ்நிரல்: குறிப்பிட்ட சிக்கலைத் தீர்க்க எழுதப்படும் நிகழ்நிரல். குறிப்பிட்ட அறிக்கையை உருவாக்கலாம். ஒரு குறிப்பிட்ட கோப்பை மேம்படுத்தலாம்.

application project-The organization of different files making up the application.
பயன்பாட்டுத்திட்டம் : பயன்பாட்டை உருவாக்கும் வேறுபட்ட கோப்புகளின் தொகுதி.

application project, starting of-
பயன்பாட்டுத் திட்டத்தைத் தொடங்கல்: ஒரு புதிய பயன்பாட்டுத் திட்டத்தைத் தொடங்கப் பின்வரும் படி நிலைகள் உள்ளன. 1) திட்ட மடிப்பட்டையைத் தட்டு. இது திட்ட ஆராய்விச்சாளரத்தில் உள்ளது. 2) பண்புச்சாளரத்திலுள்ள (பெயர்) வரிசையின் வலப்பத்தியைத் தட்டு. திட்டம் 1 லிருந்து திட்ட முதல் பயிற்சிக்குத் திட்டத்தின் பெயர்ப் பண்பை மாற்ற இது பயன்படும். 3) படிவச்சாளரத்திலுள்ள படிவத்தைத் தட்டு. இது தவறான படிவத்தை நடப்புப் பொருளாக மாற்றும். 4) பண்புச் சாளரத்திலுள்ள பெயர் வரிசையின் வலப்பகுதியைத் தட்டு. தவறான படிவப் பெயர்ப் பண்பை மாற்ற இது பயன்படும். கூட்டுவட்டி போல, தலைப்புப் பண்பையும் மாற்று. இப்பொழுது படிவம் தயாராகும். படிவத்தையும் திட்டத்தையும் மறுபெயரிடு.