பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

real

187

reg


real variable - மெய்மாறி : மிதப்புப் புள்ளி வடிவத்தில் தெரிவிக்கப்படுவது.

record - ஆவணம் : ஒன்றுக்கு மற்றொன்று தொட்ர்புள்ள தகவல் புலங்களின் தொகுதி. அமைப்பு நோக்கத்திற்காக ஒரே அலகாகக் கருதப்படுவது. இது கோப்பில் இருக்கும். ஒவ்வொரு ஆவணமும் வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் ஒரே மாதிரியாக இருக்கும். எ-டு வாடிக்கையாளர் பற்றிய தகவல். ஆவணம் எப்பொழுதும் முறைமை வடிவத்திலேயே இருக்கும்.

record list - ஆவணப் பட்டியல் : படிக்கக் கூடிய வடிவத்தில் அளிக்கப்பட்டு ஒரு கோப்பில் இருக்கும் தகவல்.

record section - ஆவணப் பகுதி : ஒரு தொகுதியிலுள்ள ஆவணப் பகுதி.

reduction, data - தகவல் குறைப்பு : கச்சாத் தகவல்களை எடுத்து, அதைப் பயனுள்ளதாக மாற்றுதல்.

redundancy - மிகையாக்கல் : பல கருவியமைப்புகளை ஒரே வேலையைச் செய்யுமாறு செய்தல். இதன் நோக்கம் இவ்வேலையின் துல்லியத்தை உயர்த்துவதே.

redundant digit - மிகைத் தகவல் : ஒர் உண்மையான கணக்கீட்டிற்குத் தேவைப்படாத இலக்கம். ஆனால், இலக்கக் கணிப்பொறியில் பிழையைச் சுட்டிக்காட்டப் பயன்படுவது.

reference address - பார்வை முகவரி : பார்வைப் புள்ளியாகப் பயன்படும் முகவரி. சார்பு முகவரியைக் கொள்ள எழுதப்படும் கட்டளைகளின் தொகுதி இது.

reference listing - பார்வைப் பட்டியலிடல் : ஒரு தொகுப்பியில் இது தொகுக்கப்படும். இறுதி நடைமுறைச் செயலில் தோன்றும் கட்டளைகளைக் காட்டுவது. இதில் சேமிப்பிடத் தகவல்கள் அடங்கும்.

reference record - பார்வை ஆவணம் : இது ஒரு தொகுப்பியின் வெளிப்பலன். குறிப்பிட்ட இறுதி நடைமுறைச் செயலில் செயல்கள், அவற்றின் நிலைகள் ஆகியவற்றைப் பட்டியலிடுவது. நடைமுறைச் செயலின் சேமிப்பு ஒதுக்கீடு, பகுதியாக்கல் ஆகியவற்றை விளக்கும் தகவலைக் கொண்டது.

refresh - புதிதாக்கு : மீண்டும் மீண்டும் ஒரு குறிகையை ஒரு சூழ்நிலையில் உண்டாக்கல். எ-டு ஓர் இயக்க நினைவு நறுவலிலுள்ள நுண்ணறைகளை துண்டுதல்.

regenerate - மீட்பாக்கம் செய் : சேமிப்பில் அதன் முதல் வடிவத்தில் தகவலை இருக்கு