பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

save

194

sea


மாறியின் மதிப்பைப் பதிவு செய்யும் முறை.

save - சேமி : நெகிழ்வட்டு முதலியவற்றில் சேமிப்புக் கருவியமைப்பில் நிகழ்நிரல் அல்லது தகவலைப் பதிவு செய்து நிலையாகத் தேக்கி வைத்தல்.

scalar type data - அளவுசார் வகைத் தகவல் : ஒரு கணிப்பொறி நிகழ்நிரலில் ஒரு தனித்தகவல் இனத்தைக் குறிக்கும் பிட்டுகளின் வரிசை முறை.

scanning - அலகிடல் : வரி வரைவு செய்தல். மின்னணுத் துப்பாக்கியிலிருந்து வரும் மின்னணுக்கள் இடமாகவும் வலமாகவும் மேலுங்கீழும் படத்தின் மீது விழும். இந்நிகழ்ச்சியே அலகிடுதல் ஆகும்.

scanner - அலகிடும் கருவி : அலகு இயற்றி மாதிரி எடுக்கும் கருவியமைப்பு பெறும் மதிப்புகளைக் கொண்டு தேவைப்படும் தகவல்களைத் தானாகத் தொடங்கி வைப்பது

scheduling - அட்டவணையிடல் : வரிசைநிலை, முன்னுரிமை ஆகியவற்றைச் செயற்படுத்தல். இதில் வேலைகள் செய்யப்படும். வேலைகளுக்குரிய தலைவாய்கள் ஒதுக்கப்படும். இதைக் கையால் இயக்கிச் செய்யலாம்.

schema - விளக்கம் : ஒரு தகவல் தளத்தை முழுமையாக விளக்குதல்.

schematic symbols - விளக்கப்படக் குறிகள் : இவை வரிப் படங்கள். வேறுபட்ட கூறுகளைக் குறிப்பவை. அனைவரும் பயன்படுத்துபவை.

scientific language - அறிவியல் மொழி : கணக்கு அல்லது அறிவியல் நிகழ்நிரல்களை எழுதுவதற்கு வடிவமைக்கப்பட்ட மொழி.

scientific notation - அறிவியல் குறிமானம் : 10 இன் வர்க்கமாகத் தெரிவிக்கப்படும் அளவுகளைக் குறிக்கும் நுணுக்கம். எ-டு. 12300 = 1.23 x 104.

scope - எல்லை : வரையறை. இது மூவகை
1) உள்ளிட எல்லை
2) அலகு எல்லை
3) அனைத்து எல்லை. விரிவு அவ்வப்பதிவில் காண்க.

scrolling - உருளல் : செங்குத்தாக அல்லது கிடைமட்டமாக நகரும் பாடத்தைக் குறிப்பது.

SCSl, Small Computer System Interface - சசி : சிறிய கணிப்பொறித் தொகுதி இடைமுகம். அதாவது ஒரு தொடர்வாயில் கணிப்பொறியுடன் இணைந்துள்ள ஏனைய கருவியமைப்புகளைக் கவனிப்பது.

search and replace - தேடு மாற்றீடு செய் : இது சொல் முறையாக்கு நிகழ்நிரலின் திறனைக் குறிப்பது. சிறப்புரு