பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

sli

200

soft


தொடங்க நடைபெறுவது.

slave - அடிமை : மற்றொரு கருவியமைப்பின் கட்டுப்பாட்டில் இயங்கும் கருவியமைப்பு.

slider - நழுவி : உரையாடல் பெட்டியில் உள்ளது. ஒரு முள்ளை நகர்த்தி, அதன் மூலம் ஓர் அளவினைக் குறிப்பது.

slot - காடி : நுண்கணிப்பொறியின் விரிதிறன். குறிப்பிட்ட பயன்பாடுகளுக்காக இதில் சுற்றுப்பலகைகள் சேர்க்கப்படும். இந்தப் பலகைகளைக் கையாளும் கொள்கலமே இக் காடி.

slow storage - மெதுச் சேமிப்பு : நீண்ட அணுக்க நேரமுள்ள சேமிப்பு வேறு பெயர் மெது நினைவகம்.

slow time scale - மெது நேர அளவுகோல் : நடைமுறை இயல்பு முறையிலுள்ள அலகு நேரத்தைக் காட்டிலும் கூடுதலாக உள்ள நேர அளவு கோல்.

small scale integrated units - சிறு அளவு ஒருங்கிணை அலகுகள்.

small tag - சிறிய ஒட்டு : <SMALL> tag. இது பெரிய ஒட்டைப் போன்றது. சிறிய அளவு எழுத்தில் பாடத்தைக் காட்டுவது. இது எப்பொழுதும் முடிவு ஒட்டு <SMALL> உடன் இணைந்தே வரும்.

smash - தகர் : ஒரு நிகழ்நிரலின் மீது மற்றொரு நிகழ்நிரலை எழுதி அழித்தல்.

SNOBOL, single oriented symbolic language - ஸ்னோபால் : ஒற்றை நோக்கக் குறிமொழி ஒநோகுமொ. உயர் நிலை நிகழ்நிரல் மொழி. உருச்சரங்களைக் கையாளப் பயன்படுவது.

soft copy - மென்படி : இது ஒரு கணிப்பொறியின் வெளிப் பலன்; காட்சித் திரையில் தோன்றுவது.

soft error - மென்பிழை ; நிலையற்றதும் முன்கூட்டியே கூற இயலாததுமான பிழை. மென் பொருளோடு தொடர்புள்ளது.

software - மென்பொருள் : இது கட்டளைகளையும் நிகழ்நிரல் களையும் குறிக்கும். இவை கணிப்பொறி செய்ய வேண்டியதைச் சுட்டுபவை. ஒ. hardWare

software engineer - மென் பொருள் பொறியர் : மென் பொருள் வல்லுநர்.

software interface - மெனபொருள் இடைமுகம் : இது ஒரு வகைக் கணிப்பொறி மொழி. இதன்மூலம் கணிப் பொறி நிகழ்நிரல்கள் ஒன்றுடன் மற்றொன்று பேசிக் கொள்ளலாம்.