பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

spe

203

sta

கையாளும் முறைச் சிக்கலைத் தீர்க்க உதவுவது. இதில் ஒவ்வொரு முகவரியும் கூறப்பெற்ற பதிவகங்களையும் இடங்களையும் குறிக்கும்.

Speech Synthesis - பேச்சுத்தொகுப்பு: ஒலிக்கோலத்தை நுண்முறையாக்கிக் கட்டுப் பாட்டில் வைத்து இதை உருவாக்கலாம். இதனால் மனிதக் குரல் உண்டாகும்.

Spelling Checker - பிழைச் சரிபார்ப்பி: இது மென்பொருள் பாடக்கோப்பில் ஒவ்வொரு சொல்லின் எழுத்து சரியாக உள்ளதா என்று பார்க்கும். இக்கோப்பு அகராதியுடன் இணைந்திருக்கும்.

Spelling Mistakes - எழுத்து பிழைகள்: இவற்றைத் தட்டச்சு செய்யும் பொழுதும் அல்லது முழு ஆவணமும் தட்டச்சு செய்யப்பட்ட பின்பும் திருத்தலாம்.

Spool - வட்டு: தாள்நாடாக்களுள் உருளும் அமைப்பு.

Spread Sheet: விரிதான் எண்களைக் கையாளும் ஆற்றல் வாய்ந்த கருவி, நேரத்தை மிச்சப்படுத்துவது. கணிதப் பிழைகளைத் தவிர்ப்பது. தனி யாள் கணிப்பொறிப் பயன்பாட்டில் புரட்சி உண்டாக்கியது.

Spread Sheet Applications -விரிதாள் பயன்பாடுகள்: 1) சம்பளப்பட்டி தயாரித்தல் 2) வருமானவரி கணக்கீடுகள் செய்தல் 3) பட்டியல்கள் தயாரித்தல் 4) கணக்கு அறிக்கைகள் உருவாக்கல் 5) பொருள் பட்டியல் கட்டுப்பாடு 6) ஆக்கச் செலவுப் பகுப்பு 7) ஒப்பந்தப்புள்ளி மதிப்பீடு 8) மாணவர்களின் தேர்ச்சி முடிவுகளைப் பகுத்துப்பார்த்தல் Spread Sheet, Structure Of - விரிதாளின் அமைப்பு: பா. electronic spread sheet.

Squeezed Files, SQ - பிழிவு கோப்புகள், பிகோ: இயல்பான கோப்புகளைக் குறிப்பது. பிழிவைப் பயன்படுத்தி நன்கு அமைக்கப்படுவது. இதைப் பிழியாமலும் செய்யலாம். இடத்தைக் குறைக்கும், மாற்று வகை நேரத்தைக் குறைக்கும்.

SQL - எஸ்குயுஎல்: இது ஒரு தனிவினவுமொழி. தகவல்களை வண்ணனை செய்து தகவல் தளத்தின் மூலம் தொடர்பு கொள்ளுவது. சில சமயங் களில் தகவல் தள மேலாண் தொகுதியைத் தகவலுடன் செய்ய வேண்டியதைச் செய்யுமாறு அறிவுறுத்துவது.