பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

stat

206

sto


இதன் மீது அச்சியற்றி அச்சுப் பதிவை ஏற்றும்.


statistical multiplexor - புள்ளி இயல் பன்மமாக்கி : நேரப் பிரிவுப் பன்மமாக்கியின் பதிப்பைக் குறிப்பது.


status word - நிலையுள்ள சொல் : வெளிப்புற அலகின் நிலைமை குறித்த செய்தியைக் கொண்ட சொல். எடுத்துக்காட்டு : எச்சரிக்கைச் செய்தி.


step change - படிநிலை மாற்றம் : ஒரு தனி உயர்வு புறக்கணிக்கும் நேரத்தில் நடைபெறும் பொழுது ஒரு மதிப்பிலிருந்து மற்றொரு மதிப்புக்கு ஏற்படும் மாற்றம்.


step counter - படிநிலை எண்ணி : கட்டளைகளில் படி நிலைகளை எண்ணும் கருவி. எடுத்துக்காட்டு : வகுத்தல், பெருக்கல், இவற்றிற்குத் தனித் தொடர் செயல்கள் தேவை.


steps in C programme - சி நிகழ்நிரலில் படிநிலைகள் : இவை பின்வருமாறு.

1) தலைப்புப் பகுதி.

2) வகை அறுதியிடும் பகுதி.

3) ஆணைப் பகுதி.


step statement - படிநிலைக் கூற்று : ஓர் அடுக்கில் உள்ள சில எண்கள் அல்லது கூறுகள் தாவச் செல்ல உதவுவது.


stop bit - நிறுத்து பிட் : ஒத்திசையாத் தொடர் செலுத்துகையில், ஒவ்வொரு உருவின் முடிவில் வரும் பிட்.


storage - சேமிப்பு : கருவியமைப்புகள் தகவல்களைத் தேக்கி வைத்தல்.


storage allocation - சேமிப்பு ஒதுக்கீடு : குறிப்பிட்ட வகைத் தகவல்களுக்குக் குறிப்பிட்ட பகுதிகளை ஒதுக்கும் முறை. ஒரு நிகழ்நிரலை உருவாக்கும் பொழுது நிறைவேற்றப்பட வேண்டிய வேலைகளில் ஒன்று இச்சேமிப்பு ஒதுக்கீடு. தொகுப்பியின் செயல்களில் ஒன்று பலவகைத் தகவல்களுக்கும் ஒதுக்கப்பட்ட பகுதிகளைச் சுட்டிக்காட்டுவது ஆகும்.


storage capacity - சேமிப்புத் திறன் : ஒர் ஊடகத்தின் ஓர் அலகில் சேமித்து வைக்கப்படும் தகவல்களின் மொத்த அளவு. ஊடகங்களை மாற்றாமல் தொகுதியை மதிப்பீடு செய்யலாம்.


storage cell - சேமிப்புக் கலம் : சேமிக்கலம். ஒரு சேமகத்தின் மிகச்சிறிய இயல்கூறு. எடுத்துக்காட்டு : உள்ளகச் சேமிப்பில் ஒரு தனி உள்ளகம்.


storage cycle - சேமிப்புச் சுழற்சி : ஒரு சுழற்சிச் சேமகத்தில் கொடுக்கப்பட்ட இடம் மதிப்பிடப்படும் பொழுது