பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

STRU

208

suit


பயன்படும்.


structures - அமைப்புகள் : வேறுபட்ட தகவல் வகைகளைக் கொண்ட தகவல் இனத்திரட்டுக்கு அமைப்பு என்று சி மொழியில் பெயர். ஒவ்வொரு தனித் தகவல் இனத்திற்கு உறுப்பு என்று பெயர். ஒவ்வொரு உறுப்புக்கும் ஒரு தனித்த பெயருண்டு. இது சி மாறி போன்று நடப்பது. கட்டமைப்புக்குள் ஏனைய சி மாறிபோலக் குறிப்பிடப்படும். ஒவ்வொரு உறுப்பும் படிக்கப்பட்டுத் தனி தகவல் இனமாக அச்சிடப்படும். பொதுவாக, அமைப்புகள் பெரும் நிகழ்நிரல்களில் சிக்கலான தகவல்களை ஒழுங்கு செய்யப் பயன்படுபவை. பா. control structures.


STRUDL, Structural Design Language - ஸ்ட்ரடல் கட்டமைப்பு வடிவமைப்பு மொழி : அமைப்புகளைப் பகுக்கவும் வடிவமைக்கவும் பயன்படுவது.


stylus - எழுதுகூர் : தூவல் போன்ற கருவியமைப்பு. வரைகலைக் கல்லோடு பயன்படுவது.


stylus printer - எழுதுகூர் அச்சியற்றி : இதில் ஒவ்வொரு உருவும் புள்ளிக் கோல வடிவத்தைப் பெறும். இப்புள்ளிகள் எழுதுகூரினால் உண்டாக்கப்படும். வேறுபெயர் கம்பி அச்சியற்றி.


subscript - கீழ்க்குறி : இயல்பான எழுத்து வரிக்குக் கீழ் அச்சிடப்படும் உருக்கள். எடுத்துக்காட்டு : A1 + B2. ஒ. super script.


subscripted variables, rules for - கீழ்க்குறி மாறிகளுக்குரிய விதிகள் : இவை பின்வருமாறு.

1) கீழ்க்குறி எப்பொழுதும் ஒரு முழு எண்.

2) கீழ்க்குறி மதிப்பு எதிர்மறையாக இருக்க இயலாது.

3) மாறியின் பெயருக்குப் பின் சதுர அடைப்புகளில் கீழ்க்குறி குறிப்பிடப்பட வேண்டும்.

4) ஒன்றுக்கு மேற்பட்ட கீழ்க்குறிகள் இருக்குமானால், அவை தனிப்பட்ட சதுர அடைப்புகளில் குறிப்பிடப்பட வேண்டும்.


subset - உட்கணம் : இனங்காணக்கூடிய தகவல் இனத் தொகுதி. இவை பெருந்தொகுதி சார்ந்திருக்கும்.


subtracter - கழிப்பி : இலக்கக் குறிகைகளைப் பயன்படுத்திக் கழித்தலைச் செய்யுங் கருவி.


Sujatha - சுஜாதா : இயற்பெயர் ரங்கராஜன், புனைபெயர் சுஜாதா. புகழ்வாய்ந்த எழுத்தாளர், பொறியர், அறிவியல் கதைகள் எழுதுபவர், தமிழ் இணைய-99 மாநாட்டின் வரவேற்புத் தலைவர். தம்முடைய எழுத்துகளை மின்னம்பலம்