பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

sum

209

sym


மூலம் வெளியிடுபவர். இணைய வளர்ச்சியில் ஆர்வத் துடன் பாடுபடுபவர்.


suite - நிரல்தொகுதி : ஒன்றுக்கு மற்றொன்று தொடர்புள்ள நிகழ்நிரல்களின் எண்ணிக்கை. இயக்கு வேலையாக இவை ஒன்றன்பின் ஒன்று செல்லும்.


summary - கருத்துச் சுருக்கம் : இது ஓர் அறிக்கை, அளிக்கப்பட்ட தகவல்களிலிருந்து குறிப்புகளைப் பெறுவது.


superscript - மேற்குறி : இயல்பான எழுத்து வரிக்குமேல் அச்சிடப்படும் உரு. எடுத்துக்காட்டு : X2 + Y4.


supervisory programme - மேற்பார்வை நிகழ்நிரல் : இது ஒரு முதன்மை நிகழ்நிரல் கணிப்பொறியின் நினைவகத்தில் நிலையாக இருப்பது. நேரப்பகிர்வு, உட்பலன் / வெளிப்பலன் / பன்ம நிகழ் நிரல் சார்புகள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவது. கணிப்பொறியின் இன்றியமையாத பகுதியாக இருந்தாலும், வன்பொருள் பகுதியாகவே கருதப் படுவது.


support - ஆதரவு : வாடிக்கையாளரின் உறுதிமொழி. இதில் உதவியும் வழிகாட்டலும் அடங்கும். கணிப்பொறிப் பயிற்சியில் வாங்கிய மென்பொருளைப் பயன்படுத்துவது குறித்தது.


surge - மின் எழுச்சி : மின் சுற்றில் ஏற்படும் மின்னோட்ட மாற்றம். இதனால் நுண்கணிப் பொறியும் அதன் வெளிப்புறப் பகுதிகளும் தவறான முடிவுகளைக் கொடுக்கும். அல்லது வேலை செய்வதை நிறுத்தும்.


surge protector - அலை எழுச்சிப் பாதுகாப்பி : சுவர்க் கூட்டில் பொருத்தி இருக்கும் கருவியமைப்பு. மாறுதிசை மின்னோட்ட வரி எழுச்சிகளிலிருந்து நுண் கணிப்பொறிகளைப் பாதுகாப்பது.


surveillance - கண்காணிப்பு : ஒரு மூலத்தை மென்பொருள் மூலம் கண்காணிக்கும் முறை.


switch - சொடுக்கி : 1) ஒரு பிட்டின் நிலையை 1-0, 0.13 க்கு மாற்றும் பொத்தான். 2) நிகழ்நிரல்களைக் கட்டளை. இது பல மாற்றுவழிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பது.


symbolic address - குறியீட்டு முகவரி : ஒரு முகவரி கொள்ளும் மூலமொழி வடிவம். இதில் நிகழ்நிரலர் தேர்ந்தெடுக்கும் ஒரு தலைக்குறியம், இதைக் குறிக்கும். முகவரி தனி. முகவரியாக மொழிபெயர்க்கப்படும். இப்பொழுது நிகழ்நிரல் தொகுக்கப்படும்.


symbolic language - குறியீட்டு மொழி : கணிப்பொறிக்குரிய கட்டளைத் தொகுதி. இதன் ஆங்கில மொழி இயல்பினால்,