பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

att

22

auto

இயல்பு : ஒரு மாறிக்குரிய செய்தியைக் கொண்டுள்ள தகவல் இனம்: எ.டு செயல்இயல்பு, முக இயல்பு, இத்தகவல் ஒட்டின் வேலையை மாற்றவல்லது.

attribute, kinds of -
பண்பு வகைகள் : 1. அகலப்பண்பு, 2. கரைப்பண்பு, 3. அனைத்து இடைவெளிப்பண்பு, 4. நுண்ணறைத்திண்டுப் பண்பு.

audio cassette recording - A common serial access mass storage method
கேட்புப் பேழைப்பதிவு : ஒரு பொதுவான தொடர் பேரளவுச் சேமிப்புமுறை.

audio conferencing -
கேட்புக்கூட்டம் : வேறுபட்ட இடங்களிலுள்ள மக்களுக்கிடையே நடைபெறும் கூட்டம்; தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளுதல்.

audit - The operations developed to confirm the evidence regarding authenticity and validity of the data in a system.
தணிக்கை : ஒரு தொகுதியி லுள்ள தகவலின் நம்புகை முறைமை பற்றிய சான்றை உறுதி செய்யும் செயல்கள்.

augment - To increase a quantity so as to bring it to a required value.
உயர்த்தல் : வேண்டிய மதிப்புக்கு ஓர் அளவின் மதிப்பை மேம்படுத்தல்.

authoring language - A programming language used for authors of computer based learning materials.
ஆசிரிய மொழி : நிகழ்நிரலாக்கும் மொழி. கணிப்பொறிப் பொருள்களை அறிய ஆசிரியர்களுக்குப் பயன்படுவது.

auto answer - The ability of a modem to answer automatically incoming phone calls.
தன்விடை: உள்வரும் அழைப்புகளுக்குத் தானாக விடையளிக்கும் இருபண்புச் செயலியின் திறன்

autocode - The processing of using a computer to convert automatically a symbolic code into a machine code.
தற்குறிமுறை : குறிபாடுள்ள ஒரு குறிமுறையை எந்திரக்குறி , முறையாகத் தானாக மாற்றும் முறை. இதைக் கணிப்பொறி செய்யும்.

auto-correct option -
தானே திருத்தும் விருப்பம் : இது மிகவும் பயனுள்ளது.பொதுவாக நிகழும் எழுத்துப் பிழைகளை நீக்குவது.

auto format sheet - A facility of StarCalc keeping to format the Worksheet with different predefined styles and colours.
தன் படிவமைப்புத் தாள் : ஸ்டார்கால்கின் வசதியகம். முன்னரே உறுதிசெய்த வேறுபட்ட பாணிகளையும் நிறங்