பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

auto

23

aux

களையும் கொண்டு வேலைத்தாளைப் படிவமைக்க உதவுவது.

automatic carriage - A mechanism to feed continuous paper thro a printing device.
தானியங்கு உருளை : அச்சியற்றும் கருவியமைப்பு வழியாகத் தொடர்ச்சியாகத் தாளைச் செலுத்தும் பொறிநுட்பம்.

automatic character recognition -
தானியங்கு உரு அறிதல் : எண்ணெழுத்துத் தகவல்களை அறிவதற்குரிய தொழில்நுட்பம்.

automatic data processing -
தானியங்கு தகவல் முறையாக்கல் : தானியங்கு கருவியினால் நடைபெறுவது.

automatic indexing - A selection of keywords from a document by computer as index entries.
தானியங்கு பொருளடைவு : கணிப்பொறி ஓர் ஆவணத்திலிருந்து திறவுச்சொற்களைப் பொருளடைவுப் பதிவுகளாகத் தேர்ந்தெடுத்தல்.

automatic programming - Preparation of machine language instructions by means of a computer.
தானியங்குநிகழ் நிரலாக்கல் : கணிப்பொறி மூலம் எந்திர மொழி ஆணைக் குறிப்புகளைத் தயாரித்தல்.

automatic semantics - A technique of describing a particular programme; the description is an attempt to prove that a programme is fault free.
தானியங்கு சொற்பொருளியல் : குறிப்பிட்ட திகழ்நிரல் கூற்றை வண்ணனை செய்யும் நுட்பம். ஒரு நிகழ்நிரல் தவறு. நீங்கியது என்பதை மெய்ப்பிக்கும் முயற்சியே இது.

auto monitor - A debugging computer program instructing a computer to make a record of its own operations.
தானியங்கு கண்காணிப்பி : பிழை நீக்கும் கணிப்பொறி நிகழ்நிரலாக்கல். இதில் கணிப்பொறி தன் செயல்களைத் தானே செய்யுமாறு ஆணைக் குறிப்பு வழங்கப்படும்.

auto-spelling correction -
தானியங்கு எழுத்துப் பிழை திருத்தம் : இது தவறான எழுத்துப் பிழைகளை நீக்கும் முறை.

auxiliary devices -
துணைக் கருவியமைப்புகள் : இவை காந்தப் பரப்புள்ள பதிவு செய்யும் கருவியமைப்புகள். அவை பின்வருமாறு 1) வன்வட்டுகள், எச்.டி.டி. 2) மென்வட்டுகள், எஃப்.டி.டி. 3) நெருக்க வட்டுகள், சி.டி.டி. விரிவு அவ்வப்பதிவுகளில் காண்க.