பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Wheel

234

Win

1) சிறப்புள்ள திறவுச் சொற்கள்.

2) பொருள்பொதிந்த துணைத் தலைப்புகள்.

3) தெறிப்புப் பட்டியல்கள்.

4) ஒரு கருத்தைத் தெரிவிக்கும் சிறிய பத்திகள்.

5) முடிவுடன் தொடங்குதல்; சுருக்கமான விளக்கங்கள் அளித்தல்.

6) சொற்களின் சரியான எண்ணிக்கையில் 50 பங்கு பயன் படுத்தல்.


Wheel Printer-ஆழி அச்சியற்றி : அச்சாழி விளிம்பிலிருந்து உருக்களை அச்சியற்றும் அச்சியற்றி.


wide area network - அகல் பகுதி வலையமைவு : இது ஒரு வலையமைவு. நீண்ட தொலை வுகளுக்குக் கணிப்பொறிகளை இணைப்பது. இயல்பாகத் தொலைபேசி வலையமைவு பயன்படுத்தப்படும். ஒ. local area network.


width attribute - அகல இயல்பு: இது, அட்டவணையின் அக லத்தைக் குறிக்கப் பயன்படு வது. இதன் மதிப்பு விழுக் காடாகத் தெரிவிக்கப்படுவது. இதனால் மேய்விச் சாளரத்தின் அளவு மாறும் பொழுது, அட்டவணையும் அதற்கேற்ப அளவில் மாறும். பா. attribute.


Wilhelm Shickard - வில் கெல்ம் ஷிக்கார்டு : 1623-இல் முதல் எந்திர இலக்கக் கணிப் பானைப் புனைந்தவர். இது கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகிய அடிப்படைச் செயல்களைச் செய்தது.


Windows - சாளரம் : இது ஓர் இயங்கு தொகுதியாகும். எடு விண்டோஸ் 98, இத்தொகுதி ஒரு மென்பொருள் வன்பொரு ளுக்கும் பயனாளிக்கும் இடை யே பாலமாக அமைவது. பல நடைமுறைப் பணிகளைச் செய்வதால், இதைக் கொண்டு கணிப்பொறியில் நன்கு வேலை செய்யலாம்.


Windows 98, customizing - விண்டோஸ் 98 ஐத் தேவைக் கேற்றதாக்குதல்: இது மேடையை வேண்டியவாறு பயன்ப்டுத்த உதவுவது. பின் னணியை மாற்றியும் படங் களைச் சேர்த்தும் தகர்த்தியும் பணிப்பட்டையை நகர்த்தியும் அளவுப் படுத்தியும் மேடை யின் தோற்றத்தை மாற்ற இயலும்.


Windows dialog boxes - சாளர உரையாடல் பெட்டிகள் : விண்டோஸ் 98 இப்பெட்டி களைப் பயன்படுத்துகிறது. நோக்கம் தகவல்களைத் திரை யில் காட்டல். இவற்றிலிருந்து வேண்டியவற்றை நாம் தெரிவு செய்யலாம். இப்பெட்டிகளில் உள்ள கட்டுப்பாடுகள் பின் வருமாறு.