பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

bin

27

Bla

மானம், 2) மாற்றல், 3) குறிப்பிட்ட விரிவு, 4) பெருக்கல். பொதுவாக, இக்கணிதம் எண்முறை சார்ந்தது.

binary cell - இரும நுண்ணறை : கணிப்பொறி நினைவகத்தின் அடிப்படை அலகு 1, 0 எண்களைச் சேமித்து வைக்க வல்லது.

binary code - இரும குறிமுறை : கணிப்பொறி பயன்படுத்தும் வகையில் எண்கள் இரும எண் தொகுதிகளாகத் தெரிவிக்கப் படுவது.

binary digit number - இரும இலக்கம் : இரும எண் முறையில் ஓர் எண்ணைத் (010) தெரிவிக்கப் பயன்படும் 0, 1 இலக்கங்கள்.

binary operation - இருமச் செயல் : இரும எண்கணிதச் செயல். இதில் இரு செயலிடங்கள் பயன்படும்.

biobreak - கழிவறை செல்லுதல்.

bistable storage device - இரு நிலைச் சேமிப்புக் கருவியமைப்பு : இவை கணிப்பொறியிலுள்ள நுண்ணறைகளை வடிவமைப்பது.

binary numbers - இரும எண்கள் : இடக்குறி மானத்தைப் பயன்படுத்தி இவை உண்டாக்கப்படுபவை எ-டு 10111. இரும எண்முறையில் 2 இன் மடங்குகள் தொகுதிகளாகப் பயன்படுகின்றன.

bit - A binary digit, 0,1, the basic unit of information in computer and a contraction of binary digit. இருமி: இரும இலக்கம், 0, 1. தகவலின் அடிப்படையலகு. binary digit. என்பதன் சுருக்கம். ஒ.byte.

bit matrix - A two-dimensional array in which each element is equal to 0, 1. இருமியணி : ஒர் இரு பரும நெடுவரிசை இதில் ஒவ்வொரு கூறும் எண் 0 அல்லது l க்குச் சமம்.

bit pattern - The sequence of 0s and 1s in a binary word. இருமிக் கோலம் : ஓர் இருமச் சொல்லில் 0, 1 என்னும் எண்கள் இருக்கும் வரிசை முறை.

bit rate - The speed in bits per second unit KBPS, MBPS. இருமி வீதம் : ஒரு வினாடியில் உண்டாகும் இருமிகளின் விரைவு அலகு ஒரு வினாடிக்கு இத்தனை கிலோ இருமிகள், ஒரு வினாடிக்கு இத்தனை மெகா இருமிகள்.

Blaise Pascal (1623-1662) - The 17th century scientist who developed the mechanical calculator.

பிளாய்சி பாஸ்கல் (1623-1662) : 17ஆம் நூற்றாண்டு அறிவியலார், எந்திரக் கணிப்பானை அமைத்தவர்.