பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

butt

33

c

போக்குவாய் வலையமைவு : கணிப்பொறிகளுக்கிடையே உள்ள மிகப்பரவலான தகவல் தொடர்முறை.

button - This is the simplest of the controls used in forms. In HTML it is used to indicate that the user has finished a current form and he can take up something further. It is of many kinds: OK, cancel buttons.
பொத்தான் : படிவங்களில் பயன்படும் மிக எளிய கட்டுப்பாடுகளில் ஒன்று. எச்டிஎம் எல்லில் நடப்பிலுள்ள படிவத்தை முடித்து மேற்கொண்டு ஏதாவது ஒன்றைப் பயனாளி எடுக்கின்றாரா என்பதைக் காட்டுவது. வகை பல. எ-டு சரி, நீக்கு, பொத்தான்கள்.

buzzword - அருஞ்சொல் : புரியாக் கலைச் சொல். 1960இல் ஹனிவெல் என்பவரால் உருவாக்கப்பட்டது. கணிப்பொறி இயலில் இது போன்ற சொற்கள் பல உண்டு.

bypass capacitor - А capacitor connected in a circuit to divert an unquoted signal: eg a carrier wave in a radio receiver.
புறவழி மின்தேக்கி : தேவையில்லாத குறிகையை விலக்க ஒரு மின்சுற்றில் இணைக்கப்படுவது. எ-டு ஒரு வானொலிப் பெறுங்கருவியிலுள்ள ஊர்தியலை.

byte, B - A group of binary digits. It is run generally used for a 8 bit Word moved around as a single unit of data in a computer system.
இருமித்தொகுதி, பி : இரும இலக்கங்களின் தொகுதி. 8 இருமிச் சொல்லைக் குறிக்கப் பொதுவாகப் பயன்படுவது. ஒரு கணிப்பொறித் தொகுதியில் ஒரு தனிச் செய்தி அலகாக நகர்ந்து செல்வது.

c

C - A high level programming language, developed by Bell Labs for writing system software. It was designed for use by professional programmers.
சி - பெல் ஆய்வகங்கள் உருவாக்கிய உயர்நிலை நிகழ்நிரல் மொழி. அமைப்பு மென்பொருள் எழுதப் பயன்படுவது. தொழில் நிலை நிகழ்நிரலால் பயன்படுவதற்குத் தகுந்தவாறு வடிவமைக்கப்பட்டது.

C Character set - A C element. This set contains the following.
சி உருத் தொகுதி : சி யின் கூறு. இதிலுள்ளவை பின்வருமாறு:
பெரிய எழுத்துகள்:
A,B,C,D,E,F,G,H,\,J,K,I,NM, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z
சிறிய எழுத்துகள்:
a,b,c,d,e,f,g,h,i,j,k,l,m,n,0,p,q, r,s,t, u,v,w,x,y,z