பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

col

45

com


வண்ணக் கூடுகைகள் பின்வருமாறு,

1) மும்மைத் திட்டம் ஒரு வட்டத்தில் சம பக்க முக்கோணம் வரையப்படுகின்றது. முக்கோண உச்சிகளிலுள்ள நிறங்கள் பயன்படுத்தப்படுகின்றன. 24 இருமி நிறக் கண்காணிப்பியில் முதன்மை மூன்று நிறங்களான சிவப்பு, பச்சை, நீலம் (RGB) ஆகியவை 8 இருமிகளைக் கொண்டவை. ஒவ்வொரு இருமியும் 256 x 256 x 256 என்னும் கூடுகைகளுக்கு வழிவகுக்கும்.


colour usage - வண்ணவழக்காறு :

முதன்மை நிறங்கள் மூன்று. சிவப்பு, பச்சை, நீலம்.

இரண்டாம் நிலை நிறம் = முதன்மை நிறம் + முதன்மை நிறம்.

மூன்றாம் நிலை நிறம் = இரண்டாம் நிலை நிறம் + முதன்மை நிறம்.

கறுப்பு, வெள்ளை, சாம்பல் ஆகிய மூன்றும் நடுநிலை நிறங்கள்.

மூன்றாம் நிலையில் மூன்று முதன்மை நிறங்களும், 12 நிறங்களும் வழிவகுப்பவை. நிறங்கள் ஒன்றுக்கு மற்றொன்று நேர் எதிராக இருப்பவை நிரப்பு நிறங்கள் எனப் படும். அணிமை நிரப்பு நிறங்கள் நல்ல ஒப்பீட்டை அளிப்பவை.


colour usage terms - வண்ண வழக்காற்றுச் சொற்கள்: வண்ணப் பயன்பாட்டில் பின்வரும் சொற்கள் அடிக்கடிப் பயன்படுகின்றன,

1) நிறப்போலி (hue): நடுநிலை நிறம் சேர்க்கப்படாதது,

2) சாயல் நிறம் (tint): நிறப்போலி + வெள்ளை

3) நிழல் (shade). நிறப்போலி + கறுப்பு.

4) திண்மை (tone); நிறப்போலி + சாம்பல் நிறம் அதன் நிரப்பு நிறத்தின் வேறுபட்ட அளவுகள்.

5) மதிப்பு (value): வெளிர் அல்லது கறுப்பு நிறம் எவ்வாறு தோன்றுகிறது.

6) செறிவு எவ்வளவு ஒளிர்வாகவும் மங்கலாகவும் நிறம் தோன்றுகிறது என்பது. இதற்கு நிறத்திறன் என்று பெயர்.


combinational logic - A digital logic circuit, eg. NAND gate. கூடுகை முறைமை : இலக்க முறைமைச் சுற்று, எடுத்துக்காட்டு : அல் வாயில்.


combo box control - This control contains multiple items but occupies less space on the screen. கூடுகைப் பெட்டிக் கட்டுப்பாடு : இக்கட்டுப்பாட்டில் பன்ம இனங்கள் இருக்கும். ஆனால் இது குறைந்த இடத்தை அடைக்கும்.


command - computer programming instruction: eg. printer. It tells a computer what to do.