பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

com

46

com


ஆணை : கட்டளை. கணிப்பொறி நிரலாக்கும் ஆணைக் குறிப்பி, எடுத்துக்காட்டு : அச்சியற்றி இது கணிப்பொறி செய்ய வேண்டுவது என்ன என்பதைச் சொல்வது.


comma operator - One of the so many operators. காற்புள்ளிச் செயலி : பல செயலிகளில் ஒன்று.


comment - An expression identifying one or more steps in a routine having no effect on execution of the routine. It helps us to know the document. விளக்கவுரை : வழக்கமாக நடைபெறும் செயலில் ஒன்றுக்கு மேற்பட்ட படிகளை அடையாளங் கண்டறியும் கோவை. செயலை நிறைவேற்றுவதில் அதற்குப் பங்கில்லை. ஆவணங்களை அறிய உதவுவது.


commercial language - A computer language designed for writing programmes for commercial application. Eg. COBOL. வணிகமொழி : வணிகப் பயன்பாட்டிற்காக நிகழ்நிரல்களை எழுத வடிவமைக்கப்பட்ட கணிப்பொறிமொழி, எடுத்துக்காட்டு : கோபல்.


common language - machine readable language common to a group of computers. பொதுமொழி : கணிப்பொறித் தொகுதிக்குப் பொதுவான எந்திரத்தால் படிக்கப்படும் மொழி.


communication channel - The medium used to connect. The computer is called a communication channel. தகவல் தொடர்பு வழி : கணிப்பொறிகளை இணைக்கப் பயன்படும் ஊடகமே தகவல் தொடர்பு வழி எனப்படும்.


communication channel, kinds of - தகவல் வழியின் பல வகைகள் : இவை பின்வருமாறு,

1) திருகிய இணைகம்பி: இது தொலைபேசிக் கம்பியே. எளிதில் கிடைப்பது விலை குறைவு. ஒரு சமயம் ஒரு தகவலையே ஓரிணை செலுத்தும். இக்கம்பிகளைக் கொண்டு கணிப்பொறிகளை இணைக்கத் தகவல் மாற்று வீதம் ஒரு மில்லியன் பிபிஎஸ் ஐ விஞ்சும். பிபிஎஸ் என்பது ஒரு வினாடிக்கு இத்தனை இருமி என்பதைக் குறிக்கும்.

2) மைய அச்சுக் கம்பி வட்டம் : கம்பி வடத் தொலைக்காட்சிகளுக்குப் பயன்படுவது, 10 மில்லியன் பிபிஎஸ் அளவுக்குத் தகவல்களைச் செலுத்தவல்லது.

3) ஒளி நார்வடம்: இது ஒரு மெல்லிய கண்ணாடி இழை. ஒளிக்கற்றையைச் சுமந்து செல்வது. 100 மில்லியன்