பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

com

49

com


கலாம். அதற்கு விதிமுறை எழுத வேண்டும்.

2) வழிமுறை என்பது அறுதியிடப்பட்ட கட்டளைகளின் வரிசை.

3) ஒவ்வொரு கட்டளையும் ஒன்றுக்கு மேற்பட்ட இயக்கங்களைக் கொண்டது.

4) ஒவ்வொரு இயக்கமும் தெளிவானதும் ஐயமற்றதுமான செயற்கூறுகளைக் கொண்டது. அறுதியிடப்பட்ட நேரத்தில் செயற்படுவது.

5) குறிப்பிட்ட சில இயக்கங்களுக்குப் பின் விதிமுறை முடிவடைய வேண்டும்.

6) வழிமுறை, விதிமுறைப் பட வாயிலாகத் தெரிவிக்கப்படுகிறது.

7) விதிமுறைகளைத் தெரிவிக்கப் பயன்படும் துல்லிய குறிமானத்திற்கு நிகழ்நிரல் மொழி என்று பெயர்.

8) நிகழ்நிரல் மொழியில் தெரிவிக்கப்படும் வழிமுறை கணிப்பொறி நிகழ்நிரல் எனப்படும்.


computer, basic units of - கணிப்பொறியின் அடிப்படை அலகுகள் : 1) உட்பலன் அலகு, 2) மையமுறையாக்கும் அலகு, மையச் செயலகம், 3) நினைவக அலகு, 4) வெளிப்பலன் அலகு.


computer communications, assurance of - கணிப்பொறித் தகவல் தொடர்பின் உறுதி :

1) ஒரே தன்மை : அனுப்பப்படும் தகவலும் பெறப்படும் தகவலும் ஒன்றே.

2) பாதுகாப்பானது : அனுப்பப்படும் தகவல் ஏனையோரால் சேதாரம் அடைவதற்கில்லை.

3) நம்பகமானது : அனுப்பப்படும் தகவலின் நிலையை அனுப்புபவரும் பெறுபவரும் நன்கு அறிவர்.


computer communications, benefits of - கணிப்பொறித் தகவல் தொடர்பின் நன்மை கள் :

1) விலை உயர்ந்த கருவியமைப்பை நாம் பகிர்ந்து கொள்ள முடிகிறது.

2) தனிப்பட்ட தகவல்களை ஒழுங்கு படுத்த முடிகிறது.

3) இன்றியமையாத் தகவல்களையும் நிகழ்நிரல்களையும் ஒரே சமயத்தில் பலரும் பயன்படுத்த முடிகிறது.

4) பகிர்ந்து கொள்ளக்கூடிய சேமிப்புக் கருவியமைப்பில் எல்லாத் தகவல்களையும் பயனாளிகள் சேமித்து வைத்துப் பாதுகாக்க முடிகிறது.


computer communications, required components of. கணிப்பொறித் தகவலின் தேவையான பகுதிகள்:

1) தகவல் : அனுப்பப்படும் செய்தியே.

2) நடைமுறை : பரிமாற்ற முறையில் ஒப்புக்கொள்ளப் பட்டமுறை.

3) வன்பொருள் : தகவல்களைச் சேமிக்க, அனுப்ப, பெறக் கருவியமைப்பு.