பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

com

51

com


4) மென்பொருள்: வலையமைவை இயக்கவும் தகவலைச் செலுத்தவும் மேலாண்மை செய்வதற்குரிய கட்டளைக் குறிப்புகள்.

5) மக்கள்: கணிப்பொறியைப் பயன்படுத்துவோர்.

computer communications, requirements of - கணிப்பொறித் தகவல்களின் தேவைகள்:

1) மாறாமை : அனுப்பும் தகவல் போலவே பெறும் தகவலும் அமைதல்.

2) பாதுகாப்பு : அனுப்பப்படும் தகவல்கள் வேண்டுமென்றோ தற்செயலாகவோ பழுதுபடாமல் இருத்தல்.

3) நம்பகம்: அனுப்பப்படும் தகவல்களின் உண்மை நிலையை பெறுபவரும் அனுப்புபவரும் தெரிந்திருக்க வேண்டும்.

computer definition - A programming electronic device designed for storing retrieving and processing data. கணிப்பொறி, கணிணி இலக்கணம் : நிகழ்நிரலாக்கும் மின்னணுக் கருவியமைப்பு. தகவலைச் சேமிக்கவும் மீட்கவும் முறையாக்கவும் வடிவமைக்கப்பட்டது.

computer education - கணிப்பொறிக் கல்வி : இது பல நிலைகளிலும் கல்விநிலையங்களாலும் தனியார் நிலையங்களாலும் நன்முறையில் அளிக்கப்படுவது. க.4

computer, features of - The features are; 1. speed. 2, reliability. 3. accuracy. 4. conversion- laser printing. கணிப்பொறியின் பண்புகள் : 1) விரைவு, 2) நம்புகை, 3) துல்லியம், 4) மாற்றல்-லேசர் ஒளியச்சு.

computer, generations of - கணிப்பொறித் தலைமுறைகள் : இவை பின்வருமாறு:

1 முதல் தலைமுறை: 1946-58. இத்தலைமுறை சார்ந்த கணிப்பொறிகளில் வெற்றிடக்குழல் பயன் படுத்தப்பட்டது. எ-டு ஈனியாக், எட்வாக்

2 இரண்டாம் தலைமுறை : 1959-64. இத்தலைமுறை சார்ந்த கணிப்பொறிகளில் படிகப்பெருக்கி பயன்பட்டது. எ-டு ஐபிஎம் 1620. பெல் ஆய்வுக் கூடம். 3) மூன்றாம் தலைமுறை: 1965-1970. இத்தலைமுறை சார்ந்த கணிப்பொறிகளில் ஒருங்கிணை சுற்றுகள் பயன் படுத்தப்பட்டன. எ-டு ஐபிஎம் 360.

4. நான்காம் தலைமுறை: 1970-2000. இத்தலைமுறைக் கணிப்பொறிகளில் நறுவல்கள் (சிப்ஸ்) பயன்படுகின்றன. எ-டு கிரே-1, சைபர்-205, ஐபிஎம்-370. நுணுகியறிதல் இவற்றின் தனிச் சிறப்பு.

computer, history of - கணிப்பொறி வரலாறு : கணிப்-