பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

com

52

com


பொறி 1500 ஆண்டுக்கால பழைய வரலாற்றையும் 500 ஆண்டுக்காலத் தற்கால வரலாற்றையும் கொண்டது. மணிச்சட்டம் 2000 ஆண்டுகளுக்கு முன் புனையப்பட்டது. கணக்கிட உதவுவது. இன்றும் பயன்படுவது. இது கணிப்பொறியின் முன்னோடி 1623-இல் வில்ஹெல்ம் ஷிக்கார்டு என்பார் முதல் எந்திர எண்கணிப்பானை அமைத்தார். இது கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகிய அடிப்படைக் கணக்குச் செயல்களைச் செய்வது. தானாக இயங்கியது.

17ஆம் நூற்றாண்டில் பினெய்ஸ் பாஸ்கல் என்பார் எந்திரக் கணிப்பானைப் புனைந்தார். 1630-இல் கலிலியோ என்பார் நழுவுகோல் என்னும் கணிப்பானை அமைத்தார்.

18 ஆம் நூற்றாண்டில் லெபனஸ் உருளை அமைக்கப்பட்டது. இது தானியங்கு முறையில் நான்கு கணக்கு அடிப்படைச் செயல்களைச் செய்தது. இதை லெபனிஸ் புனைந்தார்.

19ஆம் நூற்றாண்டில் சார்லஸ் பாபேஜ் என்பார் வேறுபாட்டு எந்திரம், பகுப்பு எந்திரம் என்னும் இரு பொறிகளை அமைத்தார். இவை நீராவியால் இயங்கின. இவர் கணிப்பொறியின் தந்தை. ஏனெனில், இவர் அமைத்த எந்திரங்கள் இரண்டும் மின்னணு ஆற்றலால் இயங்கும் கணிப்பொறிகளுக்கு வழிவகுத்தன.

20-ஆம் நூற்றாண்டில் மின்னணு ஆற்றல் அடிப்படையில் இயங்கும் கணிப்பொறிகள் அமைக்கப்பட்டன.

பாபேஜ் வழங்கிய நெறிமுறையின் அடிப்படையில் வடிவ மைக்கப்பட்ட முதல் கணிப் பொறி ஈனியாக். 1943-1945இல் இதை மாக்கிளி என்பார் அமைத்தார். இதில் வெற்றிடக் குழல் பயன்படுத்தப்பட்டது. எட்வாக் என்னும் கணிப்பொறி சேமிப்புத்திறன் கொண்டது. இதை 1944-இல் வான்நியூமான் என்பார் அமைத்தார். இதற்குப் பின் வந்த கணிப்பொறிகள் அனைத்தும் இதன் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டன. ஆகவே, இவற்றின் கட்டமைப்பு நியூமான் கட்டமைப்பு எனப்படும். நுண்மின்னுவியல் 1940-1970 வரை நன்கு வளரத்தொடங்கியது. -

1948-இல் படிகப்பெருக்கி (டிரான்சிஸ்டர்) புனையப்பட்டது.

1964-இல் ஒருங்கிணைசுற்று நிறுவல்கள் (சிப்ஸ்) அமைக்கப்பட்டன. இவை கணிப்பொறி உலகில், பெரும் புரட்சியை உண்டாக்கின.

1969-இல் ஒரு நுண்முறை யாக்கி (மைக்ரோபுராசசர்) புனையப்-