பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

com

53

com

பட்டது. புனைந்தவர்கள் ஜான் கெமினி, தாமஸ் குர்ட்ஸ்.

1981-இல் இணைமுறையாக்கக் கணிப்பொறிகள்: ஜப்பானியர்களால் வடிவமைத்து வழங்கப் பட்டது.

இதுகாறும் கூறிய கணிப்பொறி அறிஞர்களின் பெயர்களைத் தவிர, வேறு சில குறிப்பிடத்தக்க பெயர்களும் உள்ளன.

பேரா. டாம் கில்பர்ன், பேரா. பிரடி வில்லியம்ஸ் ஆகிய இருவரும் நினைவகம் உள்ள முதல் கணிப்பொறியை (1948-இல் அமைத்தனர் சுட்டெலியை 1968-இல் டவ் ஏஞ்சல் பார்ட் புனைந்தார்.

விண்டன் செர்ஃப் இணையத் தந்தை பில்கேட்ஸ் என்பார் கணிப்பொறி கோடிஸ்வரர், மைக்ரோசாஃப்ட் கழகத்தின் (அமெரிக்கா) தலைவர்.

பொதுவாக, இக்கணிப்பொறிகள் எல்லாம் நான்கு தலை முறைகளால் அடங்கும், நான்காம் தலைமுறைக் கணிப்பொறிகளின் சேமிப்புத்திறன், விரைந்த செயற்பாடு ஆகியவை மிக உயர்ந்தவை. இன்று செயற்கை நுண்ணறிவை பெற்றவைகளாக விளங்குகின்றன. பா. internet history of HTML, history of.

computer, kinds or - They are mainly five in number : 1. mainframe computer. 2. digital computer. 3. microcomputer. 4. mini computer. 5. personel computer. கணிப்பொறி வகைகள் இவை முதன்மையாக நான்கு: 1) முதன்மைக் கணிப்பொறி, 2) எண்ணிலக்கக் கணிப்பொறி 3) நுண்கணிப்பொறி, 4) சிறு கணிப்பொறி, 5) தனியாள் கணிப்பொறி.

computerised data processing, advantages of - கணிப்பொறி மயமாக்கிய தகவல் முறையாக்கலின் நன்மைகள்:

1) மனித ஆற்றல் மிச்சப்படுத்தப்படுகிறது.

2) விரைவு அதிகம்; செயல் நேரம் மிகக்குறைவு நிமிகள் வினாடிகள்.

3) தவறுகளுக்குரிய வாய்ப்புகள் மிகமிகக் குறைவு.

4) சேமிக்கப்படும் தகவல் நன்கு பெர்ருந்தி இருக்கும். இடத்தைக் குறைப்பது.

5) ஒரு கணிப்பொறியிலிருந்து மற்றொரு கணிப்பொறிக்குத் தகவல்களை விரைவாகப் பரிமாறிக்கொள்ளலாம். எ-டு வானூர்தி முன்பதிவு.

6) தகவல்களைப் பதிப்பிப்பது எளிது. இதில் திருத்தம், மாற்றங்கள் ஆகியவை அடங்கும்.

7) கோப்புகளைத் தேடவும் பிரிக்கவும் கணிப்பொறிமயமாகிய தகவல்தளம் மிகப்பயனுள்ளது. இதுபிற தகவல் கையாளும் செயல்களுக்கும் உதவும். ஒ. manual data pro-