பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

con

57

copy


control structures - கட்டுப்பாட்டு அமைப்புகள் : இவை பின்வருமாறு.

1) முறைமை அமை அமைப்பு (logical if structure)

2) வேறு இருந்தால் அமைப்பு (if else structure)

3) கூட்டினுள் கூட்டு வேறு இருந்தால் அமைப்பு (nested if else)

4) கட்டுபாடில்லாக் கோட்டுக் கூற்று (unconditional go to statement)

5) சொடுக்கி அமைப்பு (switch structure)

6) வடிவக்கட்டுப்பாடு : வடிவமளிப்பது.

7) எழுச்சியூட்டும் கட்டுப்பாடு: எழுச்சி ஊட்டுவது.


control unit, CU - கட்டுப்பாட்டலகு : பல அலகுகளுக்கிடையே தகவல்களையும் நிகழ்நிரல் குறிப்புகளையும் மாற்றும் வேலையை இது கட்டுப்படுத்துகிறது. மையச் செயலகத்தின் ஒரு பகுதி.


conversion - changing a data from one form to another.

1. from 10pt normal to 10 pt bold,

2. 4-bt numbers in the complement notation. decimal number +5, binary number 101, one's comp. 00101, two's complement. 00101 - மாற்றல் : ஒரு தகவலை ஒரு வடிவத்திலிருந்து மற்றொரு வடிவத்திற்கு மாற்றுதல்.

1) இயல்பாகவுள்ள 10 புள்ளி எழுத்தை 10 புள்ளி கொட்டை எழுத்தாக மாற்றுதல்.

2) நிரப்பு குறிமானத்தில் 4 இருமி எண்கள். தசம எண் +5. இரும எண் 101, 1இன் நிரப்பு, 00101, இரண்டின் நிரப்பு 00101.


cookies - சிறுகோப்புகள்.


coordinating data communications - தகவல் தொடர்புகளை ஒருங்கிணைத்தல் : இதில் தகவல் மோதலைத் தவிர்க்க மரபுச்சீரி (புரோட்டோகோல்) பயன்படுகிறது. இது முன்னரே வரையறை செய்யப்பட்ட நடைமுறையாகும். கணுக்களுக்கிடையே இச்சீரி தகவல் மாற்றத்தை நிறுவுவது, நிலை நாட்டுவது, தேவைப்படின் முறிப்பது.

உள்ளக நினைவகம் : காந்த உள்ளகங்களைக் கொண்ட கணிப்பொறி நினைவகம்.


copying files - கோப்புகளைப் படி எடுத்தல் : ஒரு கோப்பைப் படி எடுக்கும் பொழுது, மூலக்கோப்பு அப்படியே விடப்படும். கோப்பின் புதிய படி அது இருக்க வேண்டிய இடத்தில் வைக்கப்படும்.


copy programme - A system programme copying a data or programme file from one peripheral device to another. படி எடுக்கும் நிகழ்நிரல் : ஓர் அமைப்பு நிகழ்நிரல். ஒரு