பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

data

64

data


பதிவுரு வகைகள் ஒன்றோடு தொடர்பு கொள்ளக் கூடியது.

5) பொருள் வழித் தகவல்தளம்: இது ஒரு புதிய அமைப்பு. அண்மைக் காலத்தில் உருவானது. முற்றிலும் வேறுபட்ட அணுகுமுறையை மேற்கொள்வது. இதிலுள்ள தகவல் இனங்கள், பண்புகள், நடைமுறைகள் ஆகியவை சிக்கலான இனங்களாகத் தொகுக்கப்படும். இத்தொகுப்பே பொருள்கள் எனப்படும். பார்க்கக் கூடிய அளவில் ஒரு பொருள் என்பது விளை பொருளாகவோ, நிகழ்ச்சியாகவோ, வீடாகவோ, பயன்படுபொருளாகவோ, கலைப்பொருளாகவோ இருக்கும். இப்பொருளை அதன் இயல்புகள், பண்புகள், நடைமுறைகள் ஆகியவை வரையறை செய்பவை. இதன் சிறப்பியல்புகளுக்குப் பாடம் (உரை), ஒலி, வரைகலை, ஒளி ஆகியவை உண்டு. நிறம், அளவு, பாணி, விலை ஆகியவை பண்புகளுக்கு எடுத்துக் காட்டுகள். நடை (செயல்) முறை என்பது பொருளோடு தொடர்புள்ள முறையாக்கலை அல்லது கையாள்வதைக் குறிக்கும்.

data bus - An electrical path way between the microprocessor and memory in a computer. தகவல் போக்குவாய் : நுண் முறையாக்கிக்கும் ஒரு கணிப்பொறியின் நினைவகத்திற்கும் இடையிலுள்ள மின்வழி.

data capture - method of collecting data and converting it into a form to be used by a computer. தகவல் ஈட்டல் : தகவலைத் திரட்டிக் கணிப்பொறி பயன்படுத்துமளவுக்கு ஒரு வடிவத்திற்கு மாற்றல்.

data file, kinds of - தகவல் கோப்பின் வகைகள்: இது இருவகை.

1) ஓட்டவழிக்கோப்பு: வேறு பெயர் திட்டக் கோவை. இது மேலும் இருவகைப்படும். i) பாடக்கோப்புகள்: இதிலுள்ள கோப்புகள் அடுத்தடுத்துள்ள உருக்களைக் கொண்டிருக்கும். ii) படிவமைப்பு இல்லாக் கோப்புகள்: இதற்குத் தனித்த சேமச் சார்பலன் தொகுதி உண்டு.

2) முறைவழிக் கோப்பு: வேறு பெயர் தாழ்நிலைக்கோப்பு. இது தாழ்நிலைச் சார்பலன்களைக் கொண்டது.

data-organization - தகவல் அமைப்பு : இது மடிப்பிகள் (போல்டர்ஸ்) ஒழுங்காக அமைந்தது. ஒரு நிறுவனத்தை எடுத்துக் கொள்வோம். அதற்கு அலுவலகம், அதன் பொருள்கள், வாடிக்கையாளர்கள், வழங்குபவர் எனப்பல உண்டு. இத்தாள்கள் எல்லாம் வேறுபட்ட மடிப்பிகளில் நிரப்பப்பட்டிருக்கும்; ஒரு