பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

data

66

dead


data sheet view - தகவல்தாள் காட்சி : இது அட்டவணை அமைப்பை உருவாக்கவும், ஆவணப் பட்டியலைப் பார்வையிடவும் தகவல்களை பதிந்து பதிப்பிக்கவும் பயன்படுவது வேறுபெயர் அட்டவணை.

data sink - The end of a communication channel at which data is received. தகவல் அமிழ்வு : தகவல் தொடர்பு வழி முடிதல். இங்குத் தகவல் பெறப்படும்.

data type conversion - தகவல் வகை மாற்றம் : சி மொழியில் இதற்குத் திட்டமான விதிகள் உண்டு. விதிகளைப் பிற்சேர்க்கையில் அட்டவணையில் கண்டுகொள்க. a+b என்னும் கோவையை எடுத்துக்கொள். a என்பது முழுஎண் மாறி என்றால், b என்பது மிதப்பு மாறி. பின் b என்பது மிதப்பு மாறியாக மாற்றப்படும். கோவையின் பலன் மிதப்பு முறையின் படி மதிப்பிடப்படும்.

data types - தகவல் வகைகள் : இவை அனைத்தும் மாறி என்று கொள்ளப்பட வேண்டியவையே. வேறுபட்ட வகைகள் பின்வருமாறு : 1) எண் இருமி 2) பூல் 3) முழு எண் 4) நீளம் 5) தனி 6 இரட்டை 7) செலாவணி 8) பொருள் 9) நாள்,10) சரம் 1) மாறிடம்.

data warehouse - தகவல் சேமகம் : இது ஒரு கணிப்பொறி முறை. தொழில் துறை ]யாளர்களுக்கு முடிவெடுப் ]பதற்கு வேண்டிய தகவல்களை உடனுக்குடன் தருவது.

date arithmetic - நாள் கணக்கு : இதைக் கையால் எழுதும் பொழுது எல்லாத் தகவல்களையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இவற்றைக் கணிப்பொறியில் கொடுத்து அட்டவணைச் செயலி மூலம் செயற்படுத்துவது எளிது. பல தகவல்களுக்கும் படிவமைப்பு ஏற்படுத்தலாம். எ-டு 5-10-00 12-8-00 என்னும் இரு நாட்களுக்கு இடைபட்ட நாள்களை கணக்கிடுவோம். இதைச்செய்ய இந்த நாள்களை எவையேனும் இரு நுண்ணறைகளில் - B2, B3 - கொடுக்கவும். பின் = B2 - B3 என்னும் வாய்பாட்டை நுண்ணறை B4 - இல் கொடுக்கவும். விடை 10746 நாள்கள் என்று நுண்ணறை B4 - இல் தோன்றும்.

deadlock - தேக்கம் : இது ஒரு கணிப்பொறியில் பணி மேலும் நடைபெறாது இருக்கும் நிலை. வேறு பெயர்கள் சாவுத்தழுவல், இடைப்பூட்டு, முடிச்சு.

dead time - A period of time allowed between two related events to avoid overlap. வெற்று நேரம் : தொடர்புள்ள