பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வழி (asymmetric DSL) ; இது ஒரு திசையில் மட்டும் விரைவாகச் செல்லக் கூடியது. 2 சமச்சீருள்ள இலக்க உறுப்பினர் வழி (symmetric DSL)இது இருதிசையில் எ-டு HDSL. இதற்கு ஈரிணைக் கம்பி வடங்கள் தேவை.

Dual disk drive -A floppy disk system with two drive mechanisms for increased capacity. இரட்டை வட்டு இயக்கி: அதிக கொள்திறனுக்காக இரு இயக்கு பொறி நுட்பங்களைக் கொண்ட நெகிழ்வட்டுத் தொகுதி.

Dummy -A device kept readyfor use. மாற்று : பயன்படுவதற்கு ஆயத் தமாக உள்ள கருவியமைப்பு.

Dummy instruction -An artificial instruction included in a list to serve some purpose other than execution as an instruction. மாற்று ஆணைக் கட்டளைக் குறிப்பு : ஒரு பட்டியில் சேர்க்கப்படும் செயற்கைக் கட்ட ளைக் குறிப்பு. நிறை வேற்றும் செயலாக இல்லாமல் வேறு ஒரு நோக்கத்திற்காகப் பயன் படுவது.

Dump -To display,print or store the contents of the computer's memory. திணி : கணிப்பொறி நினைவகத்தில் சேமித்தல், அச்சியற்றல், காட்டுதல் ஆகிய செயல்கள் இதில் அடங்கும்.

Duplex-A method of communicating between two devices which permit data transfer in both directions simultaneously. இருபகுதிச்செயற்பாடு : இரு கருவியமைப்புகளுக்கிடையே தகவல் தொடர்பு கொள்ளும் முறை. இதனால் தகவல் மாறுகை ஒரே சமயம் இருதிசைகளிலும் நடைபெறும்.

Duplicate field -A series of 12 punches in a programme card. இரட்டிப்புப்புலம் : ஒரு நிகழ் நிரல் அட்டையில் 12 பொத்தல்கள் வரிசையாக இருத்தல்.

Dynamic error -An error incurred in an analog device.It results from an inadequate frequency response of the equipment. இயக்கப் பிழை: ஓர் ஒப்புமைக் கருவியமைப்பில் ஏற்படும் பிழை. கருவித் தொகுதியின் நிகழ்வு போதாத் தூண்டலினால் ஏற்படுவது.

Dynamic storage -computer storage having capacitively charged circuit elements.The elements should be continually refreshed or recharged at regular intervals.இயக்கச் சேமிப்பு: கொள்திறன் மின்சுற்றுக் கூறுகள் கொண்ட கணிப்பொறிச்