பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இவ்வகராதியில் ஒவ்வொரு பதிவும் பல நிலைகளில் இனிது விளக்கப்பட்டுள்ளது. இப்பகுப்பு நிலை படிப்பவர் கற்றலை எளிதாக்கும்.

கூறப்பெறும் செய்திகள் அளவை செய்யப்பட்டுக் கூறப்படுகின்றன. கணிப்பொறித்துறை என்பது மிக முன்னேறிய தொழில்நுணுக்கம் வாய்ந்தது. இதன் எல்லாப் பிரிவுகளும் சேர்க்கப்பட்டுள்ளன. குறிப்பாக, மின் வணிகம், இணையம் (net), இடையம் (web) முதலிய பிரிவுகள் இனிது விளக்கப் பட்டுள்ளன. சிறப்பாகக் கணிப்பொறித்துறையில் தமிழகம் பெற்றுவரும் கணிசமான வளர்ச்சியும் உரிய பதிவுகளில் விளக்கப்பட்டுள்ளது. இத்துறையின் பல பிரிவுகளை மாணவர்களும் வாசகர்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கும் முதல் அகராதி இதுவே. இதில் 5000 சொற்களுக்கு மேல் விளக்கப்பட்டுள்ளன. உரிய இடங்களில் அரிய படங்கள் சேர்த்திருப்பது தனிச்சிறப்பு.

இத்திட்டத்தைக் கல்வித்திட்டமாகச் சீரிய முறையில் செம்மையாகச் செயற்படுத்திவரும் பதிப்புச் செம்மல் தமிழவேள் ச. மெய்யப்பன் அவர்கட்கும் அவர் மகன் மெ.மீனாட்சிசோமசுந்தரம் அவர்கட்கும், அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் பதிப்பகமேலாளர் இரா. குருமூர்த்தி அவர்கட்கும் என் உளங்கனிந்த நன்றி.

எளிமை, செறிவு, தெளிவு கொண்ட இவ்வகராதியை மேல் நிலைப்பள்ளி மாணவ மாணவியர் உள்ளிட்ட அனைவரும் வாங்கிப் படித்துப் பயன்பெறுவார்களாக

இவ்வகரமுதலியின் மேம்பாட்டுக்குரிய கருத்தேற்றங்கள் இனிது வரவேற்கப்படுகின்றன.

"மெய்ப்பொருள் காண்ப தறிவு"

பேரா. அ. கி. மூர்த்தி