பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ele

85

e-mail



செய்தியை சேமிக்க உயர் பகுப்பு மின்னணுக்கற்றையை நினைவகம் பயன்படுத்தல்.

electronic bulletin board - An electronic call-up service helping users compose and store messages to be retrieved by other users. - மின்னணுத் தகவல் பலகை : மின்னணு அழைப்புப் பணி. ஏனைய பயனாளிகள் மீட்பதற்காகச் செய்திகளைத் தட்டச்சு செய்யவும், சேமிக்கவும் பிற பயனாளிகளுக்காகப் பயன்படுவது.

electronic data processing - The process carried out by electronic means. - மின்னணுத் தகவல் முறையாக்கல் : மின்னணு முறையினால் நடைபெறும் செயல்.

electronic spread sheet - A worksheet used in a computer to create and quickly analyse interrelated column reports in work spaces. - மின்னணு விரிதாள் : கணிப்பொறியில் பயன்படும் வேலைத்தாள். வேலை இடங்களில் தொடர்புள்ள பத்தி அறிக்கைகளை உருவாக்கவும் பகுக்கவும் பயன்படுவது.

electronic spread sheet, applications of - மின்னணு வரிதாள் பயன்கள் : இவை பின் வருமாறு. 1. சம்பளப் பட்டியல் தயார் செய்ய, 2. வருமானவரி கணக்கீடுகள் செய்ய, 3. பட்டியல்கள் தயார் செய்ய, 4. கணக்கு அறிக்கைகள் தயாரிக்க, 5. இருப்புப் பட்டியல் தயார் செய்ய, 6. ஆக்கச் செலவு நன்மைப் பகுப்பு, 7. நிதிக் கணக்கு தயார்செய்ய, 8. தேர்வு முடிவுகளைப் பகுத்துப் பார்க்க.

electronic spread sheet, structure of - மின்னணு விரிதாள் அமைப்பு : இது பத்திகள், வரிசைகள் என இரு பகுதிகளைக் கொண்டது. இவை இரண்டும் சேர்வதால் நுண்ணறைகள் இடையே உருவாகின்றன. இவை பத்தி, வரிசை ஒட்டுகள் எனப்படும். இவ்வறையில் தகவல்களைத் தட்டச்சு செய்யலாம். இத்தாளின் திறன் இதுவே. இவ்வறைகள் வாய்பாடுகளைக் கொண்டிருக்கும். இவை மற்ற அறைகளிலுள்ள தகவல்களுக்குரிய சில கணிதக் கணக்கீடுகளைச் செய்யும். இக்கணக்கீட்டு முடிவுகள் ஒரு புதிய நுண்ணறையில் தோன்றும்.

elite - Something stolen or pirated. - திருட்டுப் பொருள், கொள்ளைப் பொருள்.

e-magazine - மின்னிதழ் : மின் முறையில் அச்சியற்றப்படும் பருவமலர்.

e-mail - மின்னஞ்சல் : உடன் செய்தித் தொடர்பிற்காக ஒவ்வொருவரும் வைத்திருப்பது.