பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



e-mail

86

e-res



இணையத்தின் மற்றொரு பயனுள்ளதும் மிகப் பரவலாக உள்ளதுமான செயல். ஒரு வலையத்திலுள்ள கணிப்பொறியிலிருந்து அடுத்த வலையத்திலுள்ள கணிப்பொறிக்கு அனுப்பப்படுவது. இதைக் கொண்டு செய்திகள் அல்லது தகவல்களை உலகிலுள்ள எவருக்கும் உடன் அனுப்பலாம்; சில நிமிடங்களில் போய்ச் சேரும். தொலைபேசி அழைப்புகளை விட மலிவானது. எதிர்நோக்கஞ்சல் என்றும் வேடிக்கையாகக் கூறலாம்.

e-mail address - மின்னஞ்சல் முகவரி : அஞ்சல் முகவரியை ஒத்தது. இதில் இரு பகுதிகள் உள்ளன. 1. பயனாளியின் பெயர் : மின்னஞ்சல் முகவரியின் முதல் பகுதி. பயனாளி தன்னை அடையாளங் கண்டு கொள்ள ஒரு பெயரைத் தேர்ந்தெடுப்பது. 2. அஞ்சல் பெட்டி இடம்: இது இரண்டாம் பகுதி பயனாளியின் பெயரை @ என்று குறியினால் பிரிக்கப்படுவது. இது அஞ்சல் பெட்டியின் இடத்தைக் காட்டுவது. ஐஎஸ்வி பெயர், நாடு முதலிய விவரங்களைக் கொண்டது. எடுத்துக் காட்டு : Moorthy@giasmd01.vsnl.net.in

e-mail, working of.- மின்னஞ்சல் வேலை செய்தல் : இது அஞ்சல் பணி போன்றது. இதில் நாம் கடிதத்தை அனுப்புகிறோம், பெறுகிறோம். இதே போல, மின்னஞ்சல் மூலம் செய்திகளை அனுப்புகிறோம் அல்லது பெறுகிறோம். நம்மை அடையாளங் கண்டுகொள்ள நமக்கென்று ஓர் அஞ்சல் முகவரி உள்ளது. இதே போல, மின்னஞ்சலின் ஒவ்வொரு பயனாளியும் ஒரு தனி மின்னஞ்சல் முகவரியைக் கொண்டிருப்பர். நமக்கு மின்னஞ்சல் பணி வழங்குபவர் ஒரு முகவரியைக் கொடுப்பர். இணைய கணக்கை நாம் பெறும் பொழுது, ஒரு கடவுச் சொல்லும் அளிக்கப்படும். நமக்கு வரும் மின்னஞ்சல் முகவரி அஞ்சல்பெட்டியில் சேமித்து வைக்கப்படும். இப்பெட்டி அஞ்சல் அளிப்பி எனப்படும். கணிப்பொறியில் அமைந்திருப்பது. நாம் விரும்பும் பொழுது இதை நம் கணிப்பொறிக்கு மாற்றிப் படிக்கலாம். எழுதலாம். அஞ்சல் கடவுச்சொல் என்பது வேறு எவரும் படிக்காதவாறு பாதுகாப்பது. நமக்கு வரும் அஞ்சல், அஞ்சல் அளிப்பியில் சேமித்து வைக்கப்படும். இங்கிருந்து வலையமைவின் மூலம் செல்ல வேண்டிய இடத்திற்கு அஞ்சல் செல்லும்.

e-manufacturing - மின் உற்பத்தி : மின்முறையில் பொருள்கள் உருவாக்கப்படுதல்.

e-research - மின் ஆராய்ச்சி : இது மின் வணிகத்தின் உதவியால் நடைபெறுவது. மின்