பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

era

90

esc


சமான செயல் : இரு செயலிடங்களில் நடைபெறும் பூல்செயல்.

erasable storage - அழிக்க கூடிய சேமகம் : எ.டு. காந்த நாடா.

erase - அழி : சீரான குறிமுறையினால் ஓர் ஊடகச் சேமிப்பிலுள்ள தகவலை மாற்றீடு செய்தல். இக்குறிமை இன்மைத் தகவல்களைக் குறிக்கும். இவை சுழிகளாகவோ எண்களாகவோ இட உருக்களைக் குறிக்கும்.

erase head - அழிப்புத்தலை : நாடாப்போக்கு வரவிலுள்ள கருவியமைப்பு. புதிய தகவல்களை நாடாவில் எழுதப்படுவதற்குப் பழைய தகவல்களை நீக்கல்.

e-revolution - மின் புரட்சி : மின் வணிகப் புரட்சி.

ergonomics - பணிச் சூழியல் : அலுவலகங்களில் வேலை செய்யும் போது மனித உடலை ஆராயும் துறை. கணிப்பொறித் துறையோடு நெருங்கிய தொடர்புடையது.

error - பிழை : தவறு. எதிர்பார்க்கும் முடிவு ஏற்படாத நிலை. இப்பிழை இருவகை: 1. மென்பொருள் அல்லது நிகழ்நிரல் பிழைகள். 2. வன் பொருள் பிழைகள்.

error analysis - பிழை பகுப்பு : இலக்கக் கணிப்பொறியில் ஒரு சிக்கலைத் தீர்க்கும் பொழுது அடிப்படை எண்கணிதச் செயல்கள் உள்ளன. இவற்றில் ஏற்படும் பிழைகளின் தொகு விளைவை மதிப்பிடல்.

error character - பிழையுரு : தகவலிலுள்ள பிழையைக் காட்டும் உரு.

error correction - பிழை திருத்தம் : இது கணிப்பொறியால் செய்யப்படுவது.

error message - பிழைச் செய்தி : நிகழ்நிரலின் செய்தி வெளிப்பலன். இந்நிகழ்நிரல் பிழை வகையைக் காட்டுவது.

error register - பிழை பதிவகம் : இது ஒரு தனிச் சேமிப்பிடம் பிழை ஏற்படின், இதன் தனி இருமி நிலைகள் சரியாக அமையும்.

escape character - விடுபடு உரு : ஒரு குறிமுறையில் தெரிவிக்கப்படும் அடுத்தடுத்து வரும் உருக்களைக் காட்டும் ஓர் உரு. இது நடப்புநிலையிலுள்ள குறிமுறைமையிலிருந்து வேறுபடுவது.

escape sequence - விடுபடு வரிசை : இதில் வினாக்குறி (?) மேற்கோள் குறி "" முதலியவை இருக்கும்.