பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

feed

96

file


ஊட்டம் : முறையாக்கலுக்கு ஒரு கணிப்பொறியில் தகவலைச் செலுத்தல்.

feedback - 1) The response by the system to an input 2) The use of an output to either the same or another process. பின்னூட்டம் : 1. ஓர் உட்பலனுக்கு ஒரு தொகுதி துலங்கல். 2. ஒரே முறை அல்லது பிற முறைக்கு வெளிப்பலனைப் பயன்படுத்தல்.

feed tape - The mechanism feeding tape for reading. ஊட்டு நாடா : நாடாவிற்கு ஊட்டுதல் அளிக்கும் பொறிநுட்பம்.

femto - One thousand million millionth, 10-16 Eg. femto chemistry. பெம்டோ : ஓராயிரம் மில்லியன் மில்லியனாவது, 10-16 எ-டு பெம்டோ வேதிஇயல்.

fetch - retrieve data. கொணர் : தகவல்களை மீட்பு செய்.

fetch cycle - execute cycle கொணர்சுழற்சி : நிறைவேற்று சுழற்சி.

f-format - 1) In data management a fixed length logical record format. 2) In FORTRAN a real variable formatted as feed. Here μ is the width of the field and d represents the number of digits to appear after the decimal point. எஃப் படிவமைப்பு : 1. தகவல் மேலாண்மையில் நிலையான நீண்டுள்ள முறைமைப் பதிவகப் படிவமைப்பு. 2. பார்ட்ரானில் ஊட்டி என்னும் படிவமைப்புள்ள உண்மை மாறிலி. இங்கு μ என்பது புல அகலம். d என்பது பதின்மப்புள்ளிக்குப் பின் தோன்றும் இலக்கங்களின் எண்ணிக்கையைக் குறிப்பது.

fibre optical transmission - ஒளிஇழைச் செலுத்துகை : தகவல்செல்லும் ஊடகம். இதன் வழியாக அகல் அலை வரிசை விரைவாகச் செல்ல இயலும்.

field - An area within a record storing a particular type of data. புலம் : பதிவகத்திலுள்ள பகுதி. குறிப்பிட்ட வகைத் தகவலைச் சேமிப்பது.

file - The data structure used to facilitate input and output data using devices such as disc. கோப்பு : வட்டு முதலிய கருவி யமைப்புகளைப் பயன்படுத்தி உட்பலன், வெளிப்பலன் வசதி களை உண்டாக்கும் தகவல் அமைப்பு.

files access, types of - கோப்பு அணுக்க வகைகள் : 1. படி 2. எழுது 3. நிறைவேற்று,