பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

file

97

file


file, closing - கோப்பை மூடல் : கோப்பு வண்ணப்பியைக் கொண்டு இதைச் செய்யலாம் எ-டு, Close (fd); இங்கு fd என்பது கோப்பு வண்ணப்பியைக் குறிக்கும். இது மூட வேண்டிய கோப்போடு தொடர்புள்ளது.

file conversion - The process of converting data files from one format to another. Eg. Manually kept records to files created on a magnetic medium. கோப்பு மாற்றம் : தகவல் கோப்புகளை ஒருபடிவமைப்பிலிருந்து மற்றொரு படிவமைப்பிற்கு மாற்றுதல். எ-டு: கையால் எழுதி வைத்திருக்கும் ஆவணங்களைக் காந்த ஊடகத்தால் கோப்புகளாக உருவாக்கல்.

file, creating - கோப்பை உருவாக்கல் : உருவாக்கு என்னும் சார்பலனைக் கொண்டு புதிய கோப்புகளை உருவாக்கலாம். பழைய கோப்புகளைத் திரும்ப எழுதலாம். எ-டு: int fdl; fdl - create (file - name)

file identification - This is the code P mode; devised to identify a file. கோப்பு அடையாளமறிதல் : ஒரு கோப்பை அடையாளமறிய வடிவமைக்கப்படும் குறிமுறை.

file, kinds of - கோப்பு வகைகள் : 1. உயர்நிலைக் கோப்பு 2. தாழ்நிலைக் கோப்பு. 3. யூனிக்ஸ் கோப்பு. 4. மூலக் கோப்பு. 5. விபிபி கோப்பு. விரிவு அவ்வப்பதிவுகளில் காண்க.

file layout - The description of the arrangement of the data in a file. கோப்புத்திட்ட அமைப்பு : ஒரு கோப்பில் தகவல் அமைந்திருக்கும் முறையை விளக்கல்.

file maintenance - The data processing operation in which a master file is updated on the basis of one or more transaction files. கோப்புப் பேணுகை : இது தகவல் முறையாக்கும் நடவடிக்கை, இதில் ஒன்றுக்கு மேற்பட்ட நடவடிக்கைக் கோப்புகளின் அடிப்படையில் முதன்மைக் கோப்பை உருவாக்கல்.

file name - The set of alphanumeric characters used to identify and describe a file in a file label. This is a string. கோப்புப்பெயர் : ஒரு கோப்புக் குறியத்தில் ஒரு கோப்பை அடையாளங் காணவும் வண்ணனை செய்யவும் பயன்படும் எண்ணெழுத்து உருக்களின் தொகுதி. இது ஒரு சரம்.

file organization - The arrangement of files on the storage media. கோப்பு அமைப்பு : சேமிப்பு