பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 - கண்டறியாதன கண்டேன்

களாகிய வியாபாரிகளுடன் கலந்து பேசுவதற்கு மாத்திரம் காலுறைகளை அணிந்தேனே தவிர, மற்றப்படி ஊர் சு ற்றப் போகும்போதெல்லாம் வேட்டியே உடுத்திருந்தேன். அங்கே நமக்கு வேண்டிய உணவுகள் கிடைக்கும். நல்ல காய்கறிகள், அரிசிச் சாதம், ரொட்டி, வெண்ணெய் கிடைக்கும். எதற்கும் கொஞ்சம் அவலும் சத்து மாவும் எடுத்துப் போங்கள். அங்கே பால் தயிர் கிடைக்கிற மாதிரி உலகத்தில் வேறு எங்கும் கிடைப்பதில்லே' என்று சொன்னர். அவரே எனக்கு வேண்டிய பண்டங்களே வாங்கியும் கொடுத்தார். அவருடைய சொற்கள் எனக்குத் தைரியத்தை ஊட்டின.

முன்பே என்னிடம் பால்போர்ட் இருந்ததல்ை மேற். கொண்டு விளா முதலியவற்றைப் பெற ஏற்பாடு ஆயிற்று. 'பாஸ்போர்ட் என்பது நம் இந்திய அரசினர் வெளிநாட்டுக்குப் போக இசைவு தரும் இதழ்; புத்தக வடிவில் இருக்கும். 'விஸா என்பது எந்த நாட்டுக்குப் போகிருேமோ அந்த நாட்டு அரசினர் அங்கே நாம் நுழைய வழங்கும் இசைவு ஆணே. அதைப் 'பாஸ்போர்ட்டு'ப் புத்தகத்திலே பதிந்து தருவார்கள். யார் யார் உலகத் தமிழ் மாநாட்டுக்குச் செல்கிருர்கள் என்பது பின்னலே, தெரிந்தது. 17 பேர்கள் தமிழ் நாட்டிலிருந்து செல்லப் போவதாகவும், அவர்களில் 11 பேர்களுடைய செலவைத் தமிழக அரசே ஏற்பதாகவும் தெரிய வந்தது. செல்பவர் களுடைய பெயர் வரிசையைப் பார்த்தேன். அரசியல். கட்சித் தலைவர்களும், அரசியல் வேலே பார்ப்பவர்களும், பல்கலைக் கழகங்களோடு தொடர்பு உடையவர்களுமாக இருந்தார்கள். பல்கலைக் கழகத்தோடோ அரசினேடோ எந்த விதமான தொடர்பும் இல்லாமல் வெறும் இளாக இருந்தவன் r ஒருவன்தான். என்னையும் அந்தக் கூட்டத்தில் சேர்த்து அனுப்புவதற்கு என்ன காரண்ம் என்பதை எண்ணிப் பார்த்தேன். எனக்கு ஒரு காரணமும் விளங்கவில்லை. இறைவன் திருவருள் ஒன்றுதான் எனக்குத் தக்க காரணமாகத் தோற்றியது. . -τ