பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆயிரம் அடிக்கு மேல் 95

இதைக் கட்ட எடுத்துக்கொண்ட முயற்சியும், பயன் படுத்திய பொருள்களும் இதை அமைத்தவர்களின் இராட்சச வேலைக்கு அறிகுறிகள். ஆருயிரம் சதுர கஜம் காகிதம் இதன் "பிளான வரையப் பயன்பட்டதாம். இருபத்தைந்து லட்சம் இணைப்புகள் இருக்கின்றனவாம். முந்நூறு பேர்கள் இடைவிடாமல் சட்டங்களையும் பிறவற் றையும் ஆணிகளால் முடுக்கி இணைத் தார்களாம்.

இதைக் கீழ்கின்று அண்ணுந்து பார்த்தால் 'ஆ' என்ன பிரம்மாண்டமான அமைப்பு!" என்று தோன்றும். கீழிருந்து பார்த்தாலும் படத்தில் பார்த்தாலும் இதன் அளவு சரியாகத் தெரியாது. மேலேறிப் பார்த்தால்தான் ஒருவாறு தெரியவரும். -

கானும் நண்பர்களும் ஏறிப் பார்த்தோம். முதல் தளத் தில் சுற்றிப் பார்த்தோம். இரண்டாம் தளத்திலும் சுற்றி உலாவிைேம். பாரிஸ்மாகரம் ஜகஜ்ஜோதியாக ஒளிர்ந்தது. எங்கும் ஒளிமாளிகை, ஒளி ஒடை, ஒளியோவியம், ஒளி மலைகள் சிறிய வீதிகளைப் போல இருந்தன தளத்தின் காற்புறமும், அவ்வளவு உயரத்தில் கின்று பார்க்கையில், "மனிதனுக்குத்தான் எத்தனை அறிவையும் ஆற்றலையும் இறைவன் தந்திருக்கிருன்' என்ற எண்ணம் மேலிட்டது. ஆயிரம் அடி உயரத்துக்கு மேல் பொறியியல் அறிவின் சிகரமாக அந்த ஈஃபெல் கோபுரம் கிற்கிறது. அதில் ஏறிப் பார்த்தபோது அந்த இரவில் பாரிஸ் மாநகர் இருளறியா ஒளிவெள்ளத்தில் மிதக்கும் ஆனந்தக் கப்பலைப் போலத் தோன்றியது.